எப்படியோ ஒரு தெளிவுக்கு வந்துட்டாரு வெற்றிமாறன்!.. விடுதலை படத்தின் ஹீரோ இவர் தான்..
இதுவரை நகைச்சுவையில் கலக்கி வந்த நடிகர் சூரி முதன் முறையாக ஹீரோவாக நடிக்கும் படம் விடுதலை திரைப்படம்.இந்த படத்தை வெற்றிமாறன் இயக்க படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கின்றன. படத்தின் கதை காடு மற்றும் கிராமம் சம்பந்தமான பகுதிகளை சுற்றி எடுக்கப்பட்டுள்ளது.
படத்தின் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விஜய்சேதுபதியும் நடிக்கிறார் என்ற தகவல் வெளியானதில் இருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்தன. மேலும் விஜய் சேதுபதியின் கால்ஷீட் காரணமாகவும் படப்பிடிப்புகள் நீண்டு கொண்டே இருந்தன. ஒரு வழியாக முக்கால் வாசி படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் இன்னும் ஒரு சில காட்சிகள் இருப்பதாகவும் தகவல் வெளியானது.
இதையும் படிங்க : கடவுள் நம்பிக்கை இல்லாதவருக்குக் கிடைத்த வெங்கடாஜலபதி தரிசனம்…ஆச்சரியம் ஆனால் உண்மை..!
அதனால் மீண்டும் படப்பிடிப்பு துவங்கிய நிலையில் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்க எதிர்பாராத விதமாக ஒரு ஸ்டண்ட் கலைஞர் சமீபத்தில் மரணமடைந்தது ஒட்டுமொத்த படக்குழுவையும் ஆச்சரியப்படுத்தியது. ஒரு வழியாக அந்த பிரச்சினையும் சுமூகமாக மாற படம் இரண்டு பாகங்களாக தயாராகி வருகிறது.
படத்தில் விஜய் சேதுபதி இணையவும் யார் ஹீரோ? சூரியா? விஜய் சேதுபதியா? என்ற சந்தேகம் ரசிகர்கள் மனதில் எழத்தொடங்கியது. இந்த நிலையில் இரண்டு பாகங்களாக உருவாக இருப்பதால் முதல் பாகத்தில் குற்றவாளியாக நடிக்கும் விஜய் சேதுபதியை தேடும் பணியில் சூரியின் கதாபாத்திரம் அமைய இருப்பதால் முதல் பாகத்தில் அவர் ஹீரோவாகவும்
இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதியின் பின்னனி என்ன என்று அமைய இருப்பதால் இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாகவும் காட்டப்படுவர் என்று கூறப்படுகிறது. ஒரு வழியாக இருவருக்கும் சமமான முறையில் திரையை பகிர்வது யாருக்கும் பாதகம் இல்லாமல் இருப்பது சரி என்று கோடம்பாக்கத்தில் கூறிவருகிறார்கள்.