400 காளைகளுடன் களமிறங்க தயரான சூர்யா.! இந்த மாதம் ஷூட்டிங்கா.?! இதென்ன புதுசா இருக்கு.!

by Manikandan |   ( Updated:2022-03-15 14:03:39  )
400 காளைகளுடன் களமிறங்க தயரான சூர்யா.! இந்த மாதம் ஷூட்டிங்கா.?! இதென்ன புதுசா இருக்கு.!
X

பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, விசாரணை, அசுரன் ஆகிய தரமான திரைப்படங்களை தொடர்ந்து வெற்றிமாறன் தற்போது இயக்கி வரும் திரைப்படம் விடுதலை. இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை அடுத்து ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சூர்யா நடிக்க வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் திரைப்படம் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை கலைப்புலி தாணு பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளார். இதற்கான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பே வந்துவிட்டது.

இதையும் படியுங்களேன் - அதெல்லாம் கட்டுபடியாகாது.! சம்பளம் கொடுத்த நிறுவனத்திற்கே தண்ணி காட்டிய கமல்ஹாசன்.!

இப்படத்தின் சூட்டிங் எப்போது ஆரம்பிப்பார்கள் என தெரியவில்லை. ஆனால் தற்போது வெளியான தகவலின்படி, விரைவில் இப்படத்திற்கான டெஸ்ட் ஷூட் எனப்படும் ஷூட்டிங் மாதிரி எடுக்கப்பட உள்ளதாம். இதற்காக 400 காளைகள் வெவ்வேறு இடங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட உள்ளதாம்.

ஒரு வாரம் அதற்கான டெஸ்ட் ஷூட் வீடியோ ஷூட்டிங் நடைபெறுமாம். அது சரியாக வரும் பட்சத்தில் அடுத்தடுத்த வாடிவாசல் ஷூட்டிங் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெறும் என கூறப்படுகிறது.

சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் நடிக்க உள்ளார் அந்த படம் முடிந்த பிறகு தான் வாடிவாசல் பணிகளை ஆரம்பிப்பார் என கூறப்படுகிறது.

Next Story