தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் வெற்றிமாறன். பொல்லாதவன் படத்தின் வழியாக அறிமுகமானார் வெற்றிமாறன். இதுவரை அவர் இயக்கிய திரைப்படங்கள் அனைத்துமே மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன.
அவர் இயக்கிய திரைப்படங்களில் தனுஷ் கதாநாயகனாக நடித்த படங்களே அதிகம். சினிமாவிற்குள் வந்த காலத்தில் துவங்கி இவர்கள் இருவருக்குமான தொடந்துக்கொண்டே போகிறது. வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் வெளிவந்த திரைப்படங்களில் முக்கியமான திரைப்படம் அசுரன்.
அசுரன் திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்க இருந்தபோது அதன் கதைகளை பல நட்சத்திரங்களிடம் கூறினார். ஆனால் அவர்கள் அனைவரும் அந்த அப்பா கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. ஏனெனில் அது வயதான கதாபாத்திரமாக இருந்தது. எனவே அவர்கள் எல்லாம் மகன் கதாபாத்திரத்தில் வேண்டுமானால் நடிக்கிறேன் என கூறியுள்ளனர்.
இந்த சமயத்தில்தான் அந்த கதை குறித்து வெற்றிமாறனிடம் தனுஷ் கேட்டுள்ளார். அதற்கு வெற்றிமாறன் “சார் கதைப்படி ஒரு அப்பா இருக்கார். அவரோட பையன் தன் அண்ணனை கொலை பண்ணினவனை இவன் கொலை பண்ணிவிடுகிறான். அந்த கூட்டத்திடம் இருந்து மகனை அப்பா காப்பாற்ற காட்டுக்குள் செல்கிறார். அதை வைத்து செல்கிறது கதை” என்றார்.
அதை கேட்டதும் தனுஷ் “சார் எனக்கு இந்த கதை பிடித்துவிட்டது. நான் அந்த அப்பா கதாபாத்திரத்தில் நடிக்கவா?” என கேட்டுள்ளார். வெற்றிமாறன் கதையின் நாயகனாக அப்பா கதாபாத்திரத்தைதான் வைத்திருந்தார். ஆனால் பொதுவாக இந்த கதையை கேட்பவர்கள் அனைவரும் மகன் கதாபாத்திரத்தைதான் ஹீரோவாக நினைத்தார்கள்.
ஆனால் தனுஷ் கதையை கேட்டவுடனேயே அந்த அப்பா கதாபாத்திரத்திற்கு இருக்கும் மதிப்பை புரிந்துக்கொண்டார். இந்த புரிதலே அசுரன் படத்தின் வெற்றிக்கு காரணம் என ஒரு பேட்டியில் கூறியுள்ளார் வெற்றி மாறன்.
தமிழ் சினிமாவில்…
சமீபகாலமாகவே தமிழில்…
ரஜினியின் 173-வது…
சமீபத்தில் சிவகார்த்திகேயன்…
துள்ளுவதோ இளமை…