Connect with us

அந்த படத்துல இருந்து காபி அடிச்சிட்டேன்! – பொல்லாதவன் படத்தில் வெற்றிமாறன் செய்த தவறுகள்!

Cinema History

அந்த படத்துல இருந்து காபி அடிச்சிட்டேன்! – பொல்லாதவன் படத்தில் வெற்றிமாறன் செய்த தவறுகள்!

தமிழில் பொல்லாதவன் திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் இயக்குனர் வெற்றிமாறன். வெற்றிமாறன் இயக்கிய அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. மாரி செல்வராஜ், பா.ரஞ்சித் வரிசையில் இயக்குனர் வெற்றி மாறனும் கூட மக்கள் பிரச்சனைகளை பேசும் படங்களை எடுத்து வருகிறார்.

தற்சமயம் விடுதலை என்னும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். சூரி மற்றும் விஜய் சேதுபதி இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர். ஆரம்பக்காலத்தில் பல விஷயங்கள் குறித்த சிந்தனை இல்லாமல் வெற்றி மாறன் திரைப்படங்களில் சில தவறான விஷயங்களை பேசியுள்ளார்.

இதை அவரே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். பொல்லாதவன், ஆடுகளம் திரைப்படங்கள் வந்த காலக்கட்டத்தில் இந்த தவறுகளை செய்துள்ளார். பல இயக்குனர்கள் படத்தில் சில காட்சிகளை காபி அடிப்பது உண்டு. ஆனால் அதை தானே ஒப்புக்கொள்வது பெரிய விஷயம்.

பொல்லாதவன் திரைப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி ஒன்று வரும். வில்லனுக்கும் தனுஷ்க்கும் சண்டை நடக்கும் காட்சி அது. அந்த காட்சியை அபகலிப்டோ என்னும் ஹாலிவுட் படத்தில் இருந்து அப்படியே காபி அடித்துள்ளார் வெற்றிமாறன்.

ஒரு படத்தின் காட்சியை அப்படியே காபி அடிப்பது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணரவில்லை. இப்போது அதை பார்க்கும்போதுதான் எவ்வளவு பெரிய தவறு என்று தெரிகிறது என கூறியுள்ளார் வெற்றிமாறன்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top