உன்னால நான் கெட்ட.! என்னால நீ கெட்ட.! பாவம் அந்த மனுஷன் என்ன பண்ணாரு.?!
வெற்றிமாறன் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் விடுதலை. இந்த திரைப்படத்தில் முதலில் சூரி கதையின் நாயகனாக நடிக்கிறார், விஜய் சேதுபதி சிறிய கௌரவ தோற்றத்தில் நடித்து வருகிறார் என்று அறிவிக்கப்பட்டது.
முதலில் சிறிய படமாக இப்படம் உருவானது. அதாவது முதலில் இப்படத்தை தயாரித்து குறுகிய காலத்திற்குள் தயார் செய்து, சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப படக்குழு திட்டமிட்டு இருந்தது.
ஆனால், வெற்றிமரன் எப்போதும் தான் நினைத்தது வரும் வரையில் அந்த சூட்டிங்கை திரும்ப திரும்ப எடுப்பார். அதேபோல எடுக்கும் போது தனது கதையில் ஏதும் மாற்றம் தேவைப்பட்டால் அதையும் செய்து விடுவார்.
அப்படித்தான் தற்போது இப்படத்தின் ஷூட்டிங் வளர வளர இப்படமும் பெரிதாகி கொண்டே போனது. விஜய் சேதுபதி கதாபாத்திரமும் தற்போது பெரிதாக இருப்பதால் தற்போது, விடுதலை தற்போது விஜய் சேதுபதியின் படமாக மாறிவருகிறதாம்.
விஜய் சேதுபதி பல திரைப்படங்களில் நடித்து வருவதால், இப்படத்திற்கு சரியாக கால்ஷீட் ஒதுக்குவது இல்லையாம். அதேபோல வெற்றிமாறனும் சூட்டிங் எடுக்காமல் பொறுமை காத்து வருகிறாராம். இதனால் படம் இன்னும் முடியாமல் நீண்டு கொண்டே போகிறதாம்.
இதையும் படியுங்களேன் - AK62வில் இவரா.?! விஜய்க்கு வெறித்தனமா பயிற்சி கொடுத்தவர் இப்போ அஜித்துக்கா.?!
இந்த தாமதத்தினால் பாதிக்கப்பட்டது தற்போது அதில் கமிட்டாகி ஒத்துக்கொண்ட சூரி மற்றும் தயாரிப்பாளர் தான் என்கிறது திரையுலகம். விடுதலை படத்தில் நடிப்பதால் சூரி தனது கெட்டப்பை மாற்றாமல் அப்படியே போலீஸ்காரர் போல இருந்து வருகிறாராம். அண்மையில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் கூட அதே கெட்டப்பில் தான் இருந்திருப்பார் சூரி. எப்போது படம் முடிந்து தயாரிப்பாளருக்கும் சூரிக்கும் எப்போது விடுதலை கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.