தேசிய விருது இயக்குனரால் உச்சக்கட்ட மனவேதனையில் இருக்கும் தயாரிப்பாளர்...!
சினிமாவில் குறைந்த அளவில் படங்களை இயக்கி இருந்தாலும் தரமான படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் ஒரு நிலையான இடத்தை பிடித்திருக்கும் இயக்குனர் தான் வெற்றி மாறன். இவர் திரையுலகிற்கு வந்து கிட்டத்தட்ட 13 வருடங்களை கடந்து விட்டார். ஆனால் தற்போது வரை இவர் வெறும் ஐந்து படங்களை தான் இயக்கியுள்ளார்.
ஆனால் இந்த ஐந்து படங்களும் ஐம்பது ஆண்டுகளை தாண்டியும் திரை வரலாறு பேசும் அந்த அளவிற்கு வொர்த்தான படங்களாகும். இவர் இயக்கத்தில் வெளியான அத்தனை படமும் வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்பையே பெற்றது. அதுமட்டுமின்றி இவர் படங்கள் தேசிய விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.
இதனால் வெற்றிமாறன் படங்களுக்கு சினிமாவில் நல்ல மார்க்கெட் உள்ளது. தற்போது வெற்றிமாறன் இறுதியாக வெளியான அசுரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து காமெடி நடிகர் சூரியை முதன்மையாக வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு பல நாட்களாக நடந்து வருகிறது. ஆனால் படம் ஆரம்பிக்கும் சமயத்தில் வெறும் 50 நாளில் மொத்த படப்பிடிப்பையும் முடித்து விடுவேன் என்று கூறி தான் வெற்றிமாறன் படத்தை தொடங்கினாராம். ஆனால் கொரோனா ஊரடங்கு போன்ற பிரச்சனைகள் காரணமாக படத்தின் படப்பிடிப்பு தள்ளி சென்றது.
தற்போது வரை படத்தின் படப்பிடிப்பு முடியாததால் வெற்றிமாறன் அதை பெரிதுபடுத்தி படத்தின் பட்ஜெட்டை முன்பு சொன்னதை விட அதிகமாக்கி விட்டாராம். இதனால் பட்ஜெட் அதிகமானாலும் பரவாயில்லை படப்பிடிப்பு முடிந்தால் போதும் என தயாரிப்பாளர் புலம்பி வருகிறாராம். மேலும் சிறிய படம் என ஆரம்பித்து தற்போது பெரிய படமாக வந்து நிற்கும் விடுதலை படத்தால் தயாரிப்பாளர் தலையில் கைவைத்து சோகத்தில் மூழ்கி உள்ளாராம்.