வேட்டையாடு விளையாடு படத்தில் கௌதம் மேனன் வைத்த டுவிஸ்ட்... நீங்க இதை கவனிச்சு இருக்கீங்களா?
தமிழில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்த வேட்டையாடு விளையாடு படத்தில் கௌதம் மேனன் ஒரு முக்கிய ட்விஸ்ட் வைத்திருந்ததாக ஒரு சூப்பர் தகவல் வெளியாகி இருக்கிறது.
கௌதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த படம் வேட்டையாடு விளையாடு. இப்படத்தில் கமல்ஹாசன், ஜோதிகா, பிரகாஷ் ராஜ், கமலினி முகர்ஜி, டேனியல் பாலாஜி ஆகியோர் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்தில் இசையமைத்து இருந்தார். போலீஸ் வேடத்தில் கமல் கண்ணு வேணுமுனு கேட்டியாமேனு சொல்லும் டயலாக் இன்று வரை செம ஹிட் என்பது அனைவரும் அறிந்த சேதி தான்.
ஆனால் இந்த படத்தில் கௌதம் மேனன் கிளைமேக்ஸிற்கு இரண்டு விதமாக ஷூட் செய்து வைத்து இருந்தாராம். முதலில் கிளைமேக்ஸில் ஜோதிகா இறந்தது போல காட்டப்பட்ட நெகட்டிவ் காட்சியினை கொண்டு படத்தினை வெளியிட்டனர். ஆனால் படக்குழு நினைத்தபடியே இது பலராலும் விமர்சிக்கப்பட்டது. இதை தொடர்ந்தே, ஜோதிகா மீண்டும் உயிரோடு வந்தது போலவும், இருவருக்கும் திருமணம் நடப்பது போன்ற காட்சியை மாற்றி இரண்டாது கிளைமேக்ஸ் காட்சியை மாற்றி படத்தினை வெளியிட்டனராம்.
இப்படம் முதலில் சில எதிர்ப்புகளை கிளைமேக்ஸால் சந்தித்தாலும், பிறகு இரண்டாவது கிளைமேக்ஸினை பலரும் விரும்பினராம். அதனால் படம் மிகப்பெரிய வெற்றியினை பெற்றது. ரஜினி நடிப்பில் வெளியான படையப்பா வசூல் சாதனையை இப்படம் முறியடித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஸ்கிரிப்ட் ரெடி..! ஹீரோயின் ரெடி…கமல் வருவாரானு தெரியல..! காத்துக் கொண்டிருக்கும் கௌதம் மேனன்…