More
Categories: Cinema News latest news

ராகவன் இஸ் பேக்… வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகமா? சூப்பர் நியூஸால இருக்கு…

Vettaiyadu Vilaiyadu: நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் வெளியான வேட்டையாடு விளையாடு திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தொடர்பான சூப்பர் டூப்பர் தகவல்களை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் வெளியிட்டு இருக்கிறார்.

2005ம் ஆண்டு மல்லுவுட்டில் மோகன்லாலை வைத்து படமாக்கும் முடிவில் இருந்தார். ஆனால் அது நடக்காமல் போனது. அந்த நேரத்தில், ரோஜா கம்பைன்ஸ் சார்பில் காஜா மைதீன் தயாரிக்கும் படத்தில் கமல்ஹாசன் நடிக்க இருந்தார். அந்த படத்தின் இயக்குனர் தேடலில் காக்க காக்க படத்தினை பார்த்து இம்ப்ரஸான கமல் கெளதம் வாசுதேவ் மேனனை ஓகே செய்தார். 

Advertising
Advertising

இதையும் படிங்க: என்னங்க இவரு மறுபடியும் கிளம்பிட்டாரு போலயே… அஜித்தால் புலம்பும் ஆதிக்…

தசாவதாரம், பச்சைக்கிளி முத்துச்சரம் ஆகிய படங்களை இயக்கலாமா எனப் பேச்சுவார்த்தை நடந்த நிலையில் கமல் அப்போது மறுத்துவிட்டாராம். அந்த சமயத்தில் அவருக்கு போலீஸ் படத்தில் நடிக்கும் ஆர்வத்தில் இருந்தாராம். இதை தொடர்ந்தே வேட்டையாடு விளையாடு திரைப்படம் உருவாக இருந்தது. மற்ற படங்களை போல இல்லாமல் இப்படத்தின் ஸ்கிர்ப்ட் மற்றும் புரோடக்‌ஷன் பணிகளில் கமல்ஹாசன் தலையிடவே இல்லையாம்.

இப்படம் ரிலீஸாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அப்படம் ஹிட் கொடுத்தும் அதன்பின்னர் கமலுடன் கௌதம் வாசுதேவ் மேனன் இணையவே இல்லை. இதற்கான காரணம் குறித்து கேட்கும் போது, வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகத்துக்கான ஸ்கிரிப்ட் எல்லாம் தயாராக இருக்கிறது. அதற்கான நேரம் தான் இன்னும் வரவில்லை.

இதையும் படிங்க: இதற்காக தான் நடிப்பில் இறங்கினேன்… அந்த விஷயம் நல்லா இருக்கும்.. ஓபனாக சொன்ன கௌதம் மேனன்!

கமல் சாரும், நானும் தனித்தனியாக பிஸியாக இருந்துவிட்டோம். துருவ நட்சத்திரத்திற்காகவே ஆறு வருடம் முடிந்துவிட்டது. இந்த கேப்பில் இரண்டு, மூன்று முறை நான் கமல் சாரை நேரில் பார்த்தேன். அவரிடம் இந்த வேட்டையாடு விளையாடு இரண்டாம் பாகத்தின் கதையை சொன்னேன்.

அவரும் நல்லா இருக்கு. ”புரோசிட்” எனச் சொல்லிவிட்டார். ஆனால் எனக்கு தான் அதற்கான நேரம் இல்லை. துருவ நட்சத்திரம் முடிந்துவிட்டதா என்ற கேள்வி தான் நிறைய இருக்கிறது. அது முடிந்த பின்னர் தான் மற்ற படங்களில் கவனம் செலுத்த முடியும். அப்போ இந்த படம் நடக்கும் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.

Published by
Akhilan