72 வயதிலும் தளராமல் படங்களிலும், நிஜ வாழ்க்கையிலும் பல சவால்களை சந்தித்து தடைகளைத் தாண்டி வந்து வெற்றி நடைபோட்டு வருகிறார் என்றால் அது சூப்பர்ஸ்டார். படத்தில் அவரது நடை, உடை, ஸ்டைலைப் பார்த்தால் வயதானாலும் இன்னும் ஸ்டைல் அப்படியே இருக்குன்னு சொல்ற மாதிரி தான் இருக்கு.
அது அவருக்கு மட்டும் தான் வரும். அந்த வகையில் லைகா தயாரிப்பில் விரைவில் வரும் வேட்டையன் படத்துக்கான புரொமோஷன் பணிகள் ஆரம்பித்து விட்டன. அதனால் தான் இன்று முதல் சிங்கிள் வருகிறது. பாடல் வழக்கம்போல பட்டையைக் கிளப்புகிறது.
தர்பார் படத்துல ரஜினி இளமையா இருப்பாரு. அதை விட ஒரு மடங்கு மேல வேட்டையன் படத்துல இருக்காரு. படத்துல இருந்து மனசிலாயோன்னு ஒரு பாடலுக்கான போஸ்டரை வெளியிட்டு இருந்தது படக்குழு.
இந்தப் பாடலை யார் பாடினான்னும் ஒரு ட்விஸ்ட் வச்சிருந்தாங்க. இந்தப் பாடலைக் கடைசியா மலேசியா வாசுதேவன் என்பது தெரிய வந்தது. அவரது குரலை ரீகிரியேட் பண்ணி எடுத்திருக்காங்க. அனிருத் ரவிச்சந்திரனின் அட்டகாசமான இசையில் இந்த சிங்கிள் இன்று மாலை 5 மணிக்கு வெளிவருகிறது.
Also read: ஒரே படத்துல ரஜினி, அஜீத் ரசிகர்களைக் கொண்டாட வைத்த விஜய்… தலைவருன்னா சும்மாவா!
பொதுவாக என் மனசுத் தங்கம் என்ற சூப்பர்ஹிட் ஓபனிங் சாங்கை ரஜினிக்காக முரட்டுக்காளை படத்தில் பாடியவர் மலேசியா வாசுதேவன். 40 ஆண்டுகள் கடந்த பின்னும் இன்றும் பேசப்படும் பாடலாக உள்ளது. இப்படி ரஜினிக்காக பல சூப்பர்ஹிட் ஓபனிங் பாடல்களைப் பாடியவர் மலேசியாவாசுதேவன் தான்.
அதிலும் தங்கச்சிக்காக அவர் பாடும் சென்டிமென்ட் பாடல்கள் எல்லாமே அருமையாக இருக்கும். தர்மயுத்தம் படத்தில் ஒரு தங்க ரதத்தில், சிவப்பு சூரியன் படத்தில் தங்கச்சி சிரித்தாலே பாடலைச் சொல்லலாம். அதே போல சென்டிமென்டான பாடல் அடி யாரு பூங்கொடியே பாடல் வரும். அது அருமையாக இருக்கும்.
ரஜினி பொதுவாக படங்களில் ஸ்டைலாக இப்படிச்சூடுன்னு சொல்வார். அதையே மனசிலாயோ பாடலிலும் அனிருத் கொண்டு வந்து இருப்பது உற்சாகத்தை வரவழைக்கிறது.
அந்த வகையில் அனிருத் ரஜினிக்குன்னு பல ஓபனிங் சாங்குகள், பிஜிஎம்னு அருமையாகப் போட்டுள்ளார். அதனால ரசிகர்களுக்கு இந்தப் பாடல் ஒரு ட்ரீட்டாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை என்கிறார் மூத்த பத்திரிகையாளர் சங்கர்.
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…
பிரபல சினிமா…