வேட்டையன் ஆடியோ ரிலீசுக்கு தேதி குறித்த ரஜினி... கழுகு காக்கா கதை பார்ட் 2 வருமா?!
Vettaiyan: இந்திய சினிமா நடிகர்களே தலைவர் என அழைக்கும் ஒரே நடிகராக இருப்பவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். சினிமாவில் 50 வருடங்களை தொட்டுவிட்டார். விரைவில் இதற்காக விழாவும் நடக்கவிருக்கிறது. ஜெயிலர் படத்தின் வெற்றி அவரை மீண்டும் உற்சாகமாக சினிமாவில் இயங்க வைத்திருக்கிறது.
லைக்கா தயாரிப்பில் ஜெய்பீம் பட இயக்குனர் இயக்கத்தில் வேட்டையன் என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டு இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
இதையும் படிங்க: அவார்டு படம் எடுக்கணும்னு இப்படியா எடுப்பீங்க… கொட்டுக்காளியா… கொட்டும் காளியா?
லோகேஷ் கனகராஜ் படங்களுக்கு ரசிகர்களிடம் அதிக வரவேற்பு இருப்பதால் கூலி திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனாலேயே வேட்டையன் படத்திற்கு ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு இல்லை. படம் துவங்கிய பின் சில போஸ்டர்கள் மட்டுமே வெளியானது.
அதன்பின் இப்படம் பற்றி எந்த அப்டேட்டும் இல்லை. இந்த படத்தில் ரஜினியுடன் அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், ராணா, பகத் பாசில், ரித்திகா சிங் என பலரும் நடித்துள்ளனர். ஜெய்பீம் பட இயக்குனர் என்பதால் இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் இருக்கிறது. ஏனெனில், அவர் ரஜினிக்கு ஏற்றபடி ஒரு மாஸ் படத்தை இயக்குவாரா என்கிற சந்தேகம் ரசிகர்களுக்கு இருக்கிறது.
எனவே, வேட்டையன் படத்தை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்க்க லைக்கா திட்டமிட்டிருக்கிறது. எனவே, புரமோஷன் வேலைகள் துவங்கி இருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற செப்டம்பர் மாதம் 20ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசியதே அப்படத்திற்கு பெரிய புரமோஷனாக மாறியது. அதுதான் ரசிகர்களை தியேட்டருக்கு இழுத்து வந்தது. மேலும், அந்த மேடையில்தான் கழுகு - காக்கா கதையை சொன்னார் ரஜினி. அது விஜயைத்தான் பலரும் நினைத்தார்கள். ஆனால், நான் விஜயை சொல்லவில்லை என மறுத்தார் ரஜினி.
எனவே, வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி என்ன கதை சொல்லப்போகிறார் என்கிற ஆர்வம் ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: பிரச்சினையே இதுதான்.. கோட் படம் மீண்டு வருமா? எல்லாம் அவர் கைல இருக்கு