ரெடியா மாமே!.. போலீஸ் கெட்டப்பில் ரஜினி!.. அட ரிலீஸ் தேதியும் சொல்லிட்டாங்களே!....
Vettaiyan: ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதி ஒருவழியாக அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டத்தினை தொடங்கி இருக்கின்றனர்.
கோலிவுட்டில் 2024ம் ஆண்டு முதல் பகுதி ஏறத்தாழ பிளாப் தான் எனக் கூறலாம். பெரிய அளவிலான வெற்றி படங்கள் எதுவும் இல்லை. இதனால் வருடத்தின் இரண்டாம் பகுதியில் முன்னணி நாயகர்களின் படங்கள் வரிசையாக ரிலீஸுக்கு தயாராகி இருக்கிறது.
இதையும் படிங்க: எஸ்.கே. தனுஷை விட கெத்து லெஜண்ட் அண்ணாச்சிதான்!.. கொளுத்திப் போட்ட பிரபலம்!
டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்டது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இப்படத்தில் ரஜினிகாந்துடன், ஃபகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இதையும் படிங்க: அண்ணன் வராரு! ‘கோட்’ படத்தில் தோனி.. வெங்கட் பிரபுவின் பதிவால் ரசிகர்கள் உற்சாகம்
மேலும் இந்த போஸ்டரில் ரஜினிகாந்த் போலீஸ் வேடத்தில் இடம்பெற்றுள்ளார். ஏற்கனவே ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் வேடத்தில் மாஸ் காட்டியதால் வேட்டையன் திரைப்படத்தின் கேரக்டரும் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.