Vettaiyan: தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் திரைப்படமாகி இருக்கிறது வேட்டையன். இப்படத்தின் அடுத்தக்கட்ட முக்கிய தகவல்கள் சில இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் செம சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். அடுத்து அவர் நடிப்பில் உருவாகி வரும் படத்தினை டி.ஜே.ஞானவேல் இயக்கி வருகிறார். லைகா ப்ரோடக்ஷன் இப்படத்தினை தயாரித்து வருகிறது.
இதையும் படிங்க: கே.ஆர்.விஜயா தயாரித்த படத்தில் ரஜினிகாந்தை சிபாரிசு செய்த சிவாஜி கணேசன்.. என்ன படம் தெரியுமா?
இப்படத்தில் ரஜினிகாந்துடன், அமிதாப் பச்சன், ராணா டகுபதி, ஃபகத் பாசில், ரித்திகா சிங், துஜாரா விஜயன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. ஏற்கனவே ஜெயிலர் படத்தில் மல்ட் ஸ்டார் இருந்ததும் ப்ளஸ் பாயிண்ட்டாக பார்க்கப்பட்டது. அதையே ரஜினிகாந்த் இந்த படத்திலும் பாலோ செய்கிறார்.
தலைவர்170 என அழைக்கப்பட்டு வந்த இப்படத்துக்கு வேட்டையன் என்ற பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. முதலில் இப்படத்தின் வில்லனாக ஃபகத் இருப்பார் என்ற பேச்சுகள் இருந்தது. ஆனால் படத்தின் மெயின் வில்லன் ராணா தான் என்ற தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.
இதையும் படிங்க: எப்ப பாரு சுடுறது தானா…விடாமுயற்சி ப்ரேக்கில் அஜித் செய்யும் வேலை… கடைசியில் வாவ் சொல்லும் பிரபலங்கள்..!
ராணாவுக்கு ஸ்மார்ட் வில்லன் கேரக்டர் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது. ஏற்கனவே பாகுபலியில் கதிகலக்கிய ராணா இந்த படத்தில் மீண்டும் ஹிட் அடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
