வேட்டையன்ல ரஜினி, அமிதாப் வர்ற சீன் தெறிக்க விடுமாம்... அதோட பிளாஷ்பேக் இதுதான்!
வேட்டையன் அக்டோபர் 10ல் ரிலீஸ் ஆகுது. அந்தப் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு இல்ல. அதுக்குக் காரணம் இயக்குனர் த.செ.ஞானவேல் தான். மற்ற இயக்குனரா இருந்தால் பெரிய கமர்ஷியல் ஹிட்டைக் கொடுப்பாரு.
இவரு சமூக நீதியைக் கொடுத்துருப்பாரா, சமூக அரசியல் பேசியிருப்பாரா, என் கவுண்டரைப் பத்தி பேசுனாரான்னு எல்லாரும் நினைச்சிருப்பாங்க. ஆனா கூலி படத்தைப் பாருங்க. இப்பவே களைகட்ட ஆரம்பிச்சுருச்சு. காட்ல இருக்குற சிங்கத்தை விட கூண்டில் அடைக்கப்பட்ட சிங்கத்துக்கு வேகம் அதிகம்னு சொல்வாங்க.
தொடர் வெற்றியைக் கொடுத்த டைரக்டரை விட தொடர் வெற்றியைக் கொடுத்து ஒரு படம் சரியா வரலன்னா அதுக்கு அடுத்த படம் அடிச்சித் தூள் கிளப்பியிடுவோம்டான்னு வருவாரு. அப்படித்தான் இது. அதே மாதிரி வேட்டையன் படத்துல வந்த மனசிலாயோ பட்டையைக் கிளப்பியது.
Also read: குறிவச்சா இரை விழுந்தே தீரணும்… 1000 கோடியைத் தொடுமா கூலி?
செகண்ட் சிங்கிள் மாஸா இருக்கும். தொடர்ந்து கிளிம்ப்ஸ், டீசர், டிரெய்லர். செப்டம்பர் 20 ஆடியோ லாஞ்ச். இது தான் மிகப்பெரிய புரோமோ. அதைத் தவிர ரஜினி, அமிதாப் காட்சி தான் தெறிக்க விடப்போகுது. இவர் 40 வருட கால நண்பர். அமிதாப் தான் ரஜினியை பாலிவுட்டுக்கு அழைத்துச் சென்று அவரது ஆசையை நிறைவேற்றினார். அங்கு 6 படங்கள் வரை நடித்தார் ரஜினி. மேற்கண்ட தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்தார்.
2007 நண்பர்கள் தினம். சென்னை 28 படத்தோட வெற்றிவிழாவில் கமல், ரஜினி இருவரும் கலந்து கொண்டனர். அப்போ ரஜினி நட்பைப் பற்றிப் பேசுகிறார். சினிமாவில் வளர்ந்த காலகட்டத்தில் சென்னைக்கு அப்பாவை அழைத்து வந்தேன்.
அவருக்கான அத்தனை வசதிகளையும் செய்து கொடுத்தேன். 10 நாள் இருந்தாரு. 11வது நாள்ல இருந்து தொந்தரவு பண்ணினார். ஊருக்குப் போறேன்னாரு. என்னப்பா உனக்குக் குறைச்சல்னு கேட்டேன். என் ப்ரண்ட்ஸை என்னால பார்க்க முடியலையேன்னாரு.
அப்போ தான் ஆயிரம் தான் வசூல் செய்து தங்கத் தாம்பாளத்துல சோறு போட்டுக் கொடுத்தாலும் நண்பர்கள் எவ்வளவு முக்கியம்னு அன்னைக்குத் தான் எங்க அப்பா உணர்த்துனாரு என்ற தகவலையும் செய்யாறு பாலு தெரிவித்து இருந்தார்.