350 கோடி பட்ஜெட்டு!. பாத்து பண்ணுயா!.. கங்குவாவை புலம்பவிட்ட வேட்டையன்!...

by சிவா |
kanguva
X

vettaiyan: சினிமா உலகை பொறுத்தவரை உச்ச நடிகரின் படங்கள் வெளியாகும்போது அவருக்கு கீழே மார்க்கெட் உள்ள நடிகர்களின் படங்கள் வெளியாகாது. ஏனெனில், அதிக தியேட்டர்கள் கிடைக்காது மற்றும் வசூலும் வராது. எல்லோரும் அந்த பெரிய நடிகரின் படத்திற்கே போவார்கள். இது கூட கடந்த 20 வருடங்களாகத்தான்.

80, 90களில் ஒரேநாளில் ரஜினி, கமல், விஜயகாந்த், சத்தியராஜ், ராமராஜன் ஆகியோரின் படங்கள் வெளியாகும். அனைத்து படங்களுக்கும் தியேட்டர்கள் பிரிக்கப்பட்டு எல்லோரின் படமும் ஓடும். அதில், எந்த படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துபோகிறதோ அது மட்டும் அதிக நாட்கள் ஓடி வசூலை குவிக்கும்.

இதையும் படிங்க: ரெடியா மாமே!.. போலீஸ் கெட்டப்பில் ரஜினி!.. அட ரிலீஸ் தேதியும் சொல்லிட்டாங்களே!….

ஆனால், ஒரு கட்டத்தில் ரஜினி, விஜய், அஜித் போன்ற நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது மற்ற நடிகர்களின் படங்களை வெளியிடுவதை நிறுத்திவிட்டார்கள். விஜய் - அஜித்தின் படங்களே பல வருடங்கள் அப்படி ஒன்றாக வெளியாகவில்லை. பல வருடங்கள் கழித்து வாரிசு - துணிவு படங்கள் ஒன்றாக வெளியாகி 2 படங்களுமே வசூலை பெற்றது.

2024 வருடத்தை பொறுத்தவரை கடந்த 7 மாதங்களாகவே பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. சுந்தர் சி-யின் அரண்மனை 4, தனுஷின் ராயன், விஜய் சேதுபதியின் மகாராஜா, சூரியின் கருடன் ஆகிய படங்கள் வசூலை பெற்றது. இப்போது விக்ரமின் தங்கலான் படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. விஜயின் கோட், அஜித்தின் விடாமுயற்சி, ரஜினியின் வேட்டையன், சூர்யாவின் கங்குவா ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது.

vettaiyan

இந்நிலையில்தான், கங்குவா படக்குழுவினருக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, வருகிற அக்டோபர் 10ம் தேதி கங்குவா ரிலீஸ் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இப்போது ரஜினியின் வேட்டையன் படமும் அதே தேதியில் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கங்குவா படம் 350 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. வேட்டையன் படத்தோடு மோதி வசூல் பாதித்தால் என்னாவது என்கிற கலக்கம் கண்டிப்பாக கங்குவா பட தயாரிப்பாளருக்கு வந்திருக்கும். அதேநேரம், கங்குவா பட இயக்குனார் சிவா இயக்கத்தில் அஜித் நடித்து ரஜினியின் பேட்ட படத்தோடு மோதிய விஸ்வாசம் படம் அதிக வசூலை பெற்றது.

இந்த முறையும் சிவா வெற்றி பெறுவாரா இல்லை வேட்டையன் வசூல் சாதனையை செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: எஸ்.கே. தனுஷை விட கெத்து லெஜண்ட் அண்ணாச்சிதான்!.. கொளுத்திப் போட்ட பிரபலம்!

Next Story