வேட்டையன் படத்துக்கு 7500 திரையரங்குகள்... ஆடியோ லாஞ்ச்... ரஜினி சொன்ன தகவல்
த.செ.ஞானவேல் இயக்கி வரும் ரஜினிகாந்த் படம் வேட்டையன். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தில் ரஜினி, அமிதாப்பச்சன், ராணா, பகத்பாசில் உள்பட பல பெரிய பெரிய நடிகர்கள் நடித்துள்ளனர். படம் வரும் அக்டோபர் 10ல் வெளியாகிறது.
படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகி உள்ளது. ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வருவதால் ரஜினி ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டுள்ளது. படத்தைப் பற்றி நாளுக்கு நாள் அப்டேட்டுகள் வந்தவண்ணம் உள்ளன. இப்போது கிடைத்துள்ள தகவல் என்னன்னு பார்ப்போமா...
வேட்டையன் படத்தோட அனைத்துப் பணிகளும் முடிந்துவிட்டதாக அறிவித்து விட்டார்கள். அடுத்ததாக புரொமோஷன் பணிகள், போஸ்ட் புரொடக்ஷன், டப்பிங் எல்லாமே முடிகிற கட்டத்தில் இருக்கு. இந்தப் படத்துக்கு பெரிய அளவில் புரொமோஷன் தேவையில்லை. இதுல இருக்குற ஸ்டார்; காஸ்ட் ரொம்ப பெரிசு. அமிதாப்பச்சன் ஒரு பக்கம்னா இன்னொரு பக்கம் ஜாம்பவானாக ரஜினி இருக்காரு.
அதே போல இன்றைய தலைமுறை நடிகர்களும் என கலவையான ஸ்டார்கள் இருப்பதால் படத்திற்கு அப்பவே பெரிய எதிர்பார்ப்பு வந்துவிட்டது. படம் 5 மொழிகளில் உருவாகி உள்ளது. 7500 திரை அரங்குகளில் இந்தப் படம் ரிலீஸாக உள்ளது. வட இந்தியாவில் மட்டும் 3000 அரங்குகளில் படத்தை ரிலீஸ் பண்ணப் போறாங்க.
வேட்டையன் படத்தை இன்னும் அதிக திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். கங்குவா படம் 38 மொழிகளில் 10 ஆயிரம் திரை அரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். ஆனால் ஒரு மாதத்திற்குள் அவர்கள் எப்படி வெளியிடப் போகிறார்கள் என்ற பதில் இன்னும் வரவில்லை. அதனால் ரிலீஸ் தேதியைப் பற்றி இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரவில்லை.
பர்ஸ்ட் சிங்கிள், டிரெய்லரைத் தொடர்ந்து செப்டம்பர் 20ம் தேதி ஆடியோ லாஞ்ச்னு சொல்றாங்க. ரஜினிகாந்தே இந்தப் படத்தைப் பற்றி சொல்லும்போது இது நல்ல செய்தியோடு வருகிற பொழுது போக்கு படம் என்று தெரிவித்துள்ளாராம். மேற்கண்ட தகவலை பிரபல பத்திரிகையாளர் சங்கர் தெரிவித்துள்ளார்.