Categories: latest news

வேட்டையன் படத்துக்கு 7500 திரையரங்குகள்… ஆடியோ லாஞ்ச்… ரஜினி சொன்ன தகவல்

த.செ.ஞானவேல் இயக்கி வரும் ரஜினிகாந்த் படம் வேட்டையன். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தில் ரஜினி, அமிதாப்பச்சன், ராணா, பகத்பாசில் உள்பட பல பெரிய பெரிய நடிகர்கள் நடித்துள்ளனர். படம் வரும் அக்டோபர் 10ல் வெளியாகிறது.

படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகி உள்ளது. ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வருவதால் ரஜினி ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டுள்ளது. படத்தைப் பற்றி நாளுக்கு நாள் அப்டேட்டுகள் வந்தவண்ணம் உள்ளன. இப்போது கிடைத்துள்ள தகவல் என்னன்னு பார்ப்போமா…

வேட்டையன் படத்தோட அனைத்துப் பணிகளும் முடிந்துவிட்டதாக அறிவித்து விட்டார்கள். அடுத்ததாக புரொமோஷன் பணிகள், போஸ்ட் புரொடக்ஷன், டப்பிங் எல்லாமே முடிகிற கட்டத்தில் இருக்கு. இந்தப் படத்துக்கு பெரிய அளவில் புரொமோஷன் தேவையில்லை. இதுல இருக்குற ஸ்டார்; காஸ்ட் ரொம்ப பெரிசு. அமிதாப்பச்சன் ஒரு பக்கம்னா இன்னொரு பக்கம் ஜாம்பவானாக ரஜினி இருக்காரு.

vettaiyan

அதே போல இன்றைய தலைமுறை நடிகர்களும் என கலவையான ஸ்டார்கள் இருப்பதால் படத்திற்கு அப்பவே பெரிய எதிர்பார்ப்பு வந்துவிட்டது. படம் 5 மொழிகளில் உருவாகி உள்ளது. 7500 திரை அரங்குகளில் இந்தப் படம் ரிலீஸாக உள்ளது. வட இந்தியாவில் மட்டும் 3000 அரங்குகளில் படத்தை ரிலீஸ் பண்ணப் போறாங்க.

வேட்டையன் படத்தை இன்னும் அதிக திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். கங்குவா படம் 38 மொழிகளில் 10 ஆயிரம் திரை அரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். ஆனால் ஒரு மாதத்திற்குள் அவர்கள் எப்படி வெளியிடப் போகிறார்கள் என்ற பதில் இன்னும் வரவில்லை. அதனால் ரிலீஸ் தேதியைப் பற்றி இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரவில்லை.

பர்ஸ்ட் சிங்கிள், டிரெய்லரைத் தொடர்ந்து செப்டம்பர் 20ம் தேதி ஆடியோ லாஞ்ச்னு சொல்றாங்க. ரஜினிகாந்தே இந்தப் படத்தைப் பற்றி சொல்லும்போது இது நல்ல செய்தியோடு வருகிற பொழுது போக்கு படம் என்று தெரிவித்துள்ளாராம். மேற்கண்ட தகவலை பிரபல பத்திரிகையாளர் சங்கர் தெரிவித்துள்ளார்.

sankaran v

Recent Posts

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

58 minutes ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

1 hour ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

8 hours ago

கலைஞர் குடும்பத்தை பார்த்து அரசியலுக்கு வர ஆசைப்பட்ட விஜய்!.. பிடி செல்வகுமார் ஓபன்..

நடிகர் விஜய் இப்போது அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். அவரின் தமிழக வெற்றிக் கழகம் விரைவில் சட்டமன்ற தேர்தலில் சந்திக்கப்போகிறது. அரசியல்வாதியாக விஜய்…

11 hours ago

அரசன் படத்துக் கதை இதுதாங்க… சிவகார்த்திகேயன் படத்தோடு சிம்பு மோதுகிறாரா?

நடிகர் சிம்பு தற்போது நடித்து வரும் அரசன் படத்தை வெற்றி மாறன் இயக்கி வருகிறார். அனிருத் இசை அமைத்துள்ளார். இதே…

12 hours ago

இயக்குனர் பாரதிராஜா எப்படி இருக்கிறார்?!.. வெளியான போட்டோ!…

பதினாறு வயதினிலே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர் பாரதிராஜா. அதன்பின் தொடர்ந்து பல திரைப்படங்களை இயக்கி…

1 day ago