எல்லா வதந்திகளுக்கும் முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக பதிவிட்ட விக்னேஷ் சிவன்..
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக இருக்கும திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இந்த திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இவர் தான் அடுத்ததாக அஜித் படத்தை இயக்க உள்ளதால் அஜித் ரசிகர்கள் மத்தியிலும் இந்த படத்திற்கு அதிகமாக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்கின்றனர். முக்கோண காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கு இந்த படம். வருகிற நாளை திரைக்கு வரவிருக்கிறது. இந்த படத்தின் கதை எதும் தெரியாமல் தான் விஜய் சேதுபதி இருந்தாராம்.
இந்த படம் வருவதற்கு முன்பே விக்னேஷ் சிவனுக்கும் நயனுக்கும் இடையே முட்டி உரசல் போன்ற ஏகப்பட்ட வதந்திகள் வந்து கொண்டு இருந்தன. மேலும் சமந்தா விக்கி ரகசிய சந்திப்பு இதனால் இவர்கள் கல்யாணத்தில் பிரச்சினை என கிசுகிசுப்பு வந்து கொண்டு இருக்கின்றன. ரசிகர்களும் இவர்களுக்குள் என்னதான் ஆச்சு? இவர்கள் திருமணம் நடக்குமா? நடக்காதா என புலம்பி வரும் நிலையில் விக்னேஷ் சிவன் அதற்கெல்லாம் சேர்த்து முற்றுப் புள்ளி வைத்தார்.
தனது இண்ஸ்டாவில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் நட்சத்திரங்கள் புகைப்படங்களை போட்டு நாளை உங்களை மகிழ்விக்க வந்து கொண்டு இருக்கிறார்கள் எனவும், விஜய் சேதுபதி ராம்போவாகவும், சமந்தா கதீஜாவாகவும் மற்றும் "நயன்" என்னுடைய தங்கம் என்று முக்கியமாக போட்டு கண்மணியாகவும் வருகிறார்கள் என பதிவிட்டுள்ளார். இதிலிருந்தே தெரிகிறது இன்னும் அவர்களுக்குள் நல்ல சுமூகமான உறவே போய்க்கொண்டிருக்கிறது என்று.