நயன்தாராவுக்கு நச்சின்னு ஒரு கிஸ்!...பப்ளிக் பிளேஸ்ல இப்படியா பண்ணுவ விக்கி.....

by சிவா |
nayan
X

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக காதலித்து வந்த நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். திரைத்துறையில் நட்சத்திர ஜோடியாக வலம் வரும் நயன் - விக்கி திருமணத்திற்கு முன்பே லிவ்விங் டூ கெதர் ஸ்டைலில் இருந்தனர்.

காதலர் தினம், பிறந்த நாள் தினம், புத்தாண்டு என முக்கிய நாட்களில் ஜாலியாக வெளிநாட்டுக்கு பயணம் செய்து அது தொடர்பான புகைப்படங்களை விக்கி சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வந்தார்.

vignesh

திருமணத்திற்கு பின் இருவரும் ஹனிமூன் சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் விக்கி வெளியிட்டு 90 கிட்ஸ்களை உசுப்பேற்றி வருகிறார். அதிலும், இருவரும் நெருக்கமாக ரொமான்ஸ் பண்ணும் புகைப்படங்கள் பலருக்கும் வயித்தெரிச்சலை ஏற்படுத்தியது.

nayanthra

சமீபத்தில் கூட இருவரும் ஸ்பெயின் நாட்டுக்கு ஜாலி பயணம் செய்தனர். தற்போது அது தொடர்பான புகைப்படங்களை விக்கி பகிர்ந்து வருகிறார்.

nayan

இந்நிலையில், ஸ்பெயின் தலைநகரான பார்சிலோனாவில் உள்ள ஒரு அழகிய சர்ச்சுக்கு அருகில் நயனுக்கு நெற்றியில் முத்தமிட்டு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

nayan

Next Story