போட்டோஸ் சும்மா அள்ளுது!.. காதலனுடன் புத்தாண்டு கொண்டாடிய நயன்....
நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் பல வருடங்களாக காதலித்து வருகின்றனர். மேலும், அவ்வப்போது வெளியே சென்று ஊரை சுற்றி நெருக்கமாக நின்று புகைப்படங்களை வெளியிட்டு 90 கிட்ஸ் மனதை அலைக்கழித்து வருகின்றனர். நயனின் பிறந்தநாளுக்கு அவரை கொஞ்சி கொஞ்சி வார்த்தைகளை போட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறி நயனின் ரசிகர்களை கடுப்பேற்றி வருகிறார் விக்னேஷ் சிவன்.
விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. சென்னை போய்ஸ்கார்டனில் 2 வீடுகளை வாங்கியுள்ள நயன்தாரா அங்கு குடியேறியவுடன் திருமணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருபக்கம், புத்தாண்டை கொண்டாடுவதற்காக நயனும், விக்னேஷ் சிவனும் சில நாட்களுக்கு முன்பு துபாய் பறந்து சென்றனர். துபாயில் உள்ள உலகிலேயே அதிக உயரமான புர்ஜீ கலீப கட்டிடம் அருகே இருவரும் புத்தாண்டு இரவை கழித்தனர்.
இது தொடர்பான வீடியோவை ஏற்கனவே விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
தற்போது அது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.