ஒருவழியா விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்!.. எப்போது ரிலீஸ் தெரியுமா?.. பரபர அப்டேட்!...

vidamuyarchi
Vidamuyachi: அஜித் நடித்த பரபரப்பாக தயாராகி வந்த விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்திருக்கும் நிலையில் அடுத்த கட்ட முக்கிய அறிவிப்புகளும் இணையத்தில் கசிந்திருக்கிறது.
அஜித்தின் ஒவ்வொரு படத்திற்கும் ரசிகர்கள் ஒரு அப்டேட்டுக்கும் பெரிய அளவில் காத்திருக்க வேண்டும். ஆனால் விடாமுயற்சி திரைப்படம் தொடங்கியதிலிருந்து நிறைய அதிர்ச்சிகளையே காண முடிந்தது. முதலில் இப்படத்தினை இயக்க இருந்தது விக்னேஷ் சிவன் தான். ஆனால் அவர் சொன்ன கதை அஜித்துக்கு திருப்தி அளிக்காத நிலையில் அவர் படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இதையும் படிங்க: பா.ரஞ்சித்தின் அடுத்த வில்லன் ஆர்யாவே.. ஆனா ஹீரோ யாரு தெரியுமா?
அவருக்கு பதில் இயக்குனர் மகிழ் திருமேனி இப்படத்தை இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். கடந்த வருடம் மே மாதம் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் பெயர் விடாமுயற்சி என அறிவிக்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்புகள் தொடங்குவதற்கு பல மாதங்கள் எடுத்தது.

vidamuyarchi
இதை எடுத்து அஜித் தன்னுடைய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்ப கடந்த வருட இறுதியில் இப்படத்தில் ஷூட்டிங் படம் தொடங்கியது. இருந்தும் அவர்கள் திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடிக்க முடியாததற்கு காலநிலை காரணமானது. இதனால் அஜித் தன்னுடைய அடுத்த படத்திற்குள் நுழைந்தார்.
இதையும் படிங்க: சமந்தா செஞ்ச அதே மேட்டரை செய்யும் சோபிதா… இப்போ சைதன்யா என்ன செய்வாரு?
இந்நிலையில் தற்போது விடாமுயற்சி படப்பிடிப்பு மொத்தமாக முடிக்கப்பட்ட விட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சின்ன சின்ன பேட்ச் ஒர்க் காட்சிகள் மட்டும் இன்னும் சில தினங்களில் முடிக்கப்பட்ட விடும் எனவும் கூறப்படுகிறது. படத்தை அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் வெளியிட லைக்கா நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.
ஏற்கனவே அக்டோபர் மாதத்தில் ரஜினிகாந்தின் வேட்டையன் மற்றும் சூர்யாவின் கங்குவா என இரண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் ரேஸில் இருப்பதால் படத்தினை நவம்பரில் வெளியிடலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இப்படத்தில் முதல் சிங்கள் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என தகவல் தெரிவிக்கிறது.