தீபாவளிக்கு படம் இருக்கா? இல்லையா?!.. விடாமுயற்சி ரிலீஸ் தேதியில் என்ன குழப்பம்?..

Vidaamuyarchi: துணிவு திரைப்படத்திற்கு பின் அஜித் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. துணிவு படம் வெளியாகி ஒன்றரை வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. ஆனாலும், அஜித்தின் அடுத்த படம் இன்னமும் வெளியாகவில்லை. துணிவு படத்திற்கு பின் அஜித் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக சொல்லப்பட்டது.

ஆனால், சில மாதங்கள் கழித்து அவர் தூக்கப்பட்டார். அதன்பின் மகிழ் திருமேனி உள்ளே வந்தார். இவர் தனது தடையற தாக்க, மிகாமன், தடம் ஆகிய படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர். பல மாதங்கள் அவரும், அஜித்தும் கதைக்காக ஆலோசனை செய்தனர். மகிழ் திருமேனி கதையை எழுத அஜித்தோ பைக்கை எடுத்துக்கொண்டு உலகம சுற்றப்போனார்.

இதையும் படிங்க: கோட் படம் வசூல் குறைஞ்சதுக்கு இதுதான் காரணம்! இவர் சொன்னா சரியாத்தான் இருக்கும்

ஒருவழியாக ஒரு ஆங்கில படத்தின் உரிமையை வாங்கி அதை எடுப்பது என முடிவெடுத்தார்கள். வழக்கம்போல் வெளிநாட்டில் எடுக்கலாம் என் அஜித் சொல்ல பல நாடுகளுக்கும் போய் ஒருவழியாக அஜர்பைசான் நாட்டை தேர்ந்தெடுத்து படப்பிடிப்பை துவங்கினார்கள்.

மனைவியாக திரிஷாவும், வில்லனாக அர்ஜூனும் நடிக்க படப்பிடிப்பு துவங்கியது. ஆனால், பல காரணங்களால் படப்பிடிப்பு தடைப்பட்டது. அதற்கிடையே விடாமுயற்சி படம் தீபாவளி ரிலீஸ் என அறிவித்தார்கள். தற்போது படப்பிடிப்பு முடிந்துவிட்டாலும் ஒரு பாடல் எடுக்க வேண்டியிருக்கிறது.

vidaamuyarchi

இதற்காக ஸ்பெயின் நாட்டுக்கு போவதாக திட்டமிட்டு இப்போது இத்தாலி நாட்டை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இந்நிலையில், விடாமுயற்சி தீபாவளிக்கு இல்லை என இன்று செய்திகள் வெளியானது. அதற்கு காரணம் இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு நடக்க வேண்டியிருப்பதுதான்.

ஆனால், தீபாவளிக்கு ரிலீஸ் என்பதில் இப்போதுவரை உறுதியாக இருக்கிறோம் என்கிறது படக்குழு. அதேநேரம், அது முடியாமல் போனால் டிசம்பரில் ரிலீஸ் என்கிறது படக்குழு. பொங்கலுக்கெல்லாம் தள்ளி போட விருப்பமில்லையாம். விடாமுயற்சி தீபாவளிக்கு ரிலீஸ் இல்லையெனில் சூர்யாவின் கங்குவா படம் தீபாவளிக்கு வருமா என்கிற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.

இதையும் படிங்க: 10 டிவிடி பார்த்து படம் பண்ணார் அட்லீ.. சம்பளம் வாங்கிட்டு போயிட்டார் விஜய்!.. பொங்கிய பிரபலம்!..

Related Articles
Next Story
Share it