அஜித் ரசிகர்களை அப்செட் ஆக்கிய எஸ்.கே. பட அப்டேட்!.. எல்லாம் போச்சா!...

by சிவா |
ajith
X

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தில் அஜித்தின் மனவியாக திரிஷா நடித்து வருகிறார். மேலும், லியோ படத்திற்கு பின் இந்த படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் வில்லனாக நடித்து வருகிறார். இந்த படம் துவங்கியது முதலே பல பிரச்சனைகளில் சிக்கியது.

இதனால் பல நாட்கள் படப்பிடிப்பு நடக்கவில்லை. ஒருபக்கம், மகிழ் திருமேனி மிகவும் மெதுவாகவும், பொறுமையாகவும் காட்சிகளை எடுத்து வந்தார். இதனால், அஜித், அர்ஜூன், திரிஷா என எல்லோரும் கோபப்பட்டார்கள். அஜர்பைசானில் படக்குழு தங்கியிருந்து ஒரு நாள் படப்பிடிப்பு நடந்த பல லட்சங்கள் செலவாகும்.

இதையும் படிங்க: ஜெயிலர் படத்தின் 2 நாள் வசூலை கூட தாண்டாத இந்தியன் 2!… என்னடா உலக நாயகனுக்கு வந்த சோதனை!..

ஒருகட்டத்தில் செலவை சமாளிக்க முடியாமல் லைக்கா நிறுவனம் திணறியது. எனவே, அஜித் குட் பேட் அக்லி படத்தை கமிட் செய்து அதில் நடிக்க போனார். விடாமுயற்சி துவங்கி பல மாதங்கள் ஆகியும் ஒரு போஸ்டர் கூட வெளியாகாத நிலையில் குட் பேட் அக்லி அடுத்த பொங்கல் ரிலீஸ் என அறிவித்தார்கள்.

எனவே, அஜித் ரசிகர்களே விடாமுயற்சி மீது பொறுமை இழந்தனர். இப்போது இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அஜர்பைசானில் நடந்து வருகிறது. அதன்பின் ஒரு சண்டை காட்சியை மட்டும் சென்னை அல்லது ஹைதராபாத்தில் எடுக்க திட்டமிட்டிருக்கிறார்கள். அதோடு படப்பிடிப்பு முடிவடைகிறது.

amaran

விடாமுயற்சி படத்தை வருகிற தீபாவளி அக்டோபர் 31ம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால், அது நடக்குமா என்பது தெரியவில்லை. ஒருபக்கம், ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் அமரன் படம் தீபாவளிக்கு அதாவது அக்டோபர் 31ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது.

அமரன், விடாமுயற்சி ஆகிய 2 படங்களையும் தமிழ்நாட்டில் வெளியிடும் உரிமையை ரெட்ஜெயண்ட் நிறுவனம் பெற்றிருக்கிறது. ஒரே நாளில் 2 படங்களை அவர்கள் வினியோகம் செய்யமாட்டார்கள் என்பதால் விடாமுயற்சி தீபாவளி ரிலீஸ் இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது. இதனால் அஜித் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர்.

Next Story