Cinema News
அடி மேல் அடிவாங்கும் லைகா.. கதைத்திருட்டு சர்ச்சையில் விடாமுயற்சி.. எங்க போய் முடியப்போகுதோ..
நடிகர் அஜித் நடித்து வரும் விடாமுயற்சி திரைப்படம் தற்போது கதைதிருட்டு சர்ச்சையில் சிக்கி இருக்கின்றது.
Actor Ajith: தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் துணிவு. ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டு கொடுத்தது. அதனை தொடர்ந்து தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி உள்ளிட்ட 2 திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.
விடாமுயற்சி தாமதம்:
துணிவு திரைப்படத்திற்கு பிறகு நடிகர் அஜித் கமிட்டான திரைப்படம் விடாமுயற்சி. லைக்கா நிறுவனம் தயாரித்து இருந்த இந்த திரைப்படம் பல பிரச்சினைகளில் சிக்கி கடைசியாக இயக்குனர் மகிழ்திருமேனி கையில் சேர்ந்தது. இந்த திரைப்படம் கடந்த இரண்டு வருடங்களாக எடுக்கப்பட்டு வருகின்றது.
இதையும் படிங்க: நெகட்டிவிட்டிய இக்னோர் பண்ணி செம பிஸியான தனுஷ்… கேட்கவே சும்மா அதிருதே!..
படத்திற்கு விடாமுயற்சி என்ற பெயர் தொடர்பான அப்டேட்டை தவிர வேறு எந்த அப்டேட்டும் வராததால் சற்று வருத்தத்தில் இருந்தார்கள் ரசிகர்கள். இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் எடுக்கப்பட்டு வந்தது. அங்கு ஏற்பட்ட காலசூழ்நிலை காரணமாக இப்படத்தில் படப்பிடிப்பு தொடர்ந்து தாமதமாகி வருவதாக படக்குழுவினர் தெரிவித்து இருந்தார்கள். படம் கடந்த 2 வருடங்களாக எடுக்கப்பட்டு வந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு மட்டும் இன்னும் முடிந்த பாடில்லை.
விடாமுயற்சி டீசர்:
படத்தில் இன்னும் சில காட்சிகள் எடுக்கப்பட வேண்டும் மற்றும் ஒரு பாடல் காட்சிகள் படமாக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ள நிலையில் கடந்து சில தினங்களுக்கு முன்பு விடாமுயற்சி படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. இந்த திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருப்பதாக புகழ்ந்து பேசி வந்தார்கள். மேலும் இப்படம் பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக கூறப்பட்டு வருகின்றது.
கதை திருட்டு சர்ச்சை:
விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் 7ஆம் தேதி தொடங்க இருப்பதாகவும், அடுத்த 10 நாட்களில் படத்தின் அனைத்து பேட்ச் ஒர்க்கும் முடிந்து போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணி தொடங்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால் படம் கட்டாயம் பொங்கலுக்கு வெளியாகி விடும் என்பது உறுதியாகி இருக்கின்றது. இந்நிலையில் விடாமுயற்சி திரைப்படத்திற்கு புதிய சிக்கல் எடுத்துள்ளது.
இதையும் படிங்க: செலவுக்கு காசு இல்ல!. 2 படங்களை தட்டி தூக்கி கோடிகளை குவிக்கும் ஜெயம் ரவி!…
இந்த திரைப்படம் பிரேக் டவுன் என்கின்ற ஹாலிவுட் திரைப்படத்தின் ரீமேக் என்பது பலருக்கும் தெரியும். இப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி தான் படத்தை எடுத்திருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் தற்போது வரை ரீமேக் உரிமையை வாங்காமல் இருந்து வந்திருக்கின்றது லைக்கா நிறுவனம். படம் முழுவதுமாக எடுக்கப்பட்டு ரிலீசுக்கு தயாராகி உள்ள நிலையில் தற்போது வரை படத்தில் ரீமேக் உரிமை வாங்கப்படாத நிலையில் படத்திற்கு 150 கோடி நஷ்ட ஈடு கேட்டு படக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.