இவ்வளவு குழப்பமா? விடாமுயற்சி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இதுவா? வெளிவந்த பக்கா அப்டேட்
Vidamuyarchi: விடாமுயற்சி திரைப்படம் தொடங்கியதிலிருந்து பிரச்சனைக்கு மேல் பிரச்சனை மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. மற்ற படங்களுக்கு வழிவிட்டு இப்படம் தொடர்ந்து பின்னோக்கி சென்று கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் தற்போது ரிலீசிலும் இந்த குழப்பம் நிலவி வருகிறது.
லைக்கா நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டு வரும் திரைப்படம் விடாமுயற்சி. ஆச்சரியமாக அஜித்தின் இப்படம் கடந்த ஆண்டு அவரின் பிறந்த நாளில் டைட்டிலுடன் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் சூட்டிங் குறித்த எந்த தகவலும் இல்லாமல் கிடப்பில் கிடந்தது.
இதையும் படிங்க: விஜய் அரசியலால் கோட் படத்துக்கு சிக்கலா? தயாரிப்பாளர் சொல்வது என்ன?
கடந்த ஆண்டு கடைசியில் தான் இப்படத்தின் சூட்டிங் தொடங்கப்பட்டது. பின்னர் விறுவிறுவென காட்சிகளும் படமாக்கப்பட்டது. இருந்தும் அஜர்பைஜானின் கால சூழ்நிலையால் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து ரத்தானது. இதை அடுத்து லைக்கா நிறுவனத்தின் மற்ற திரைப்படங்கள் ரிலீஸ் நெருங்கியதை அடுத்து விடாமுயற்சி சூட்டிங் நிறுத்தப்பட்டது.
தற்போது படப்பிடிப்புகள் மொத்தமாக முடிந்திருக்கும் நிலையில் அடுத்த கட்ட ரிலீஸ் தேதி குறித்த கேள்விகள் எழுந்துள்ளது. முதலில் இப்படம் அக்டோபரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தீபாவளி ரிலீஸ் படக்குழு திட்டமிட்டால் அது படத்தின் வசூலில் மிகப்பெரிய அடியை வாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஐஸ்வர்யா ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் போல நான் இல்ல.. ஓபனாக பேசிட்டாரே!…
சிவகார்த்திகேயனின் அமரன், துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர், ஜெயம் ரவியின் பிரதர், நெல்சன் தயாரிக்கும் பிளடி பெக்கர் உள்ளிட்ட திரைப்படங்கள் தீபாவளி ரிலீஸை குறிவைத்து இருக்கிறது. இந்த கூட்டத்தோடு விடாமுயற்சியை வெளியிட்டால் தியேட்டர்கள் குறையும் வசூலும் பெரிய அடியை வாங்கும்.
இதனால் இப்படத்தை தீபாவளி முடிந்து கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியிடப்படவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். விரைவில் இது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் எதுவென்றாலும் படத்தை தனியாக ரிலீஸ் செய்யவே படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.