விடாமுயற்சிக்கே விடிவுகாலம் பொறக்கல!.. அதுக்குள்ள அடுத்த படமா?!.. கொஞ்சம் யோசிச்சு முடிவெடுங்க சார்!…

Published on: November 26, 2024
magizh thirumeni
---Advertisement---

விடாமுயற்சி படத்தின் இயக்குனர் மகிழ்திருமேனி விக்ரமின் அடுத்த திரைப்படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

தமிழ் சினிமாவில் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த தடையற தாக்க என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் மகிழ்திருமேனி. இந்த திரைப்படத்தை தொடர்ந்து தடம், கழகத் தலைவன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி இருக்கின்றார். இவர் தற்போது நடிகர் அஜித்தை வைத்து விடாமுயற்சி என்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார்.

இதையும் படிங்க: நயன்தாராலாம் சும்மா!. நாக சைதன்யா – சோபிதா திருமண ஒளிபரப்புக்கு எவ்வளவு கோடி தெரியுமா?!…

இப்படத்தின் சூட்டிங் கடந்த ஆண்டு துவங்கப்பட்ட நிலையில் ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பு மட்டும் இன்னும் முடிந்த பாடு இல்லை. இப்படத்தில் நடிகர் அஜித்துடன் சேர்த்து திரிசா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசெண்ட்ரா உள்ளிட்ட  மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்திருக்கின்றது. இப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசை அமைத்திருக்கின்றார்.

இவ்படத்தின் பெரும்பாலான காட்சிகள் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்றது. கடந்த ஆறு மாத காலமாக படத்தின் சூட்டிங் நடக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது. அதற்கு காரணம் அஜர்பைஜானில் நிலவி வரும் கால சூழ்நிலை மாற்றம் தான். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு படத்தின் சூட்டிங் மீண்டும் துவங்கப்பட்டு ஒட்டுமொத்த சூட்டிங் நிறைவடைந்ததாக கூறப்பட்டது.

vikram
vikram

படத்தில் ஒரு சில பேட்ச் ஒர்க் மட்டும் மீதம் இருப்பதால் அந்த ஷூட்டிங் டிசம்பர் மாதத்திற்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. வரும் பொங்கலுக்கு விடாமுயற்சி திரைப்படம் வெளியாகிவிடும் என்று எதிர்பார்த்த நிலையில் இப்படம் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியாகும் என்று கூறப்படுகின்றது.

அதற்கு பதிலாக வரும் பொங்கலுக்கு நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாக இருப்பதாக கூறப்படுகின்றது. ஆனால் இது தொடர்பான எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. விடாமுயற்சி திரைப்படத்தின் தாமதத்திற்கு இயக்குனர் மகிழ்திருமேனி தான் காரணம் என்று பலரும் அவரை குறை கூறி வருகிறார்கள். இந்நிலையில் இந்த திரைப்படத்தின் சூட்டிங்கே இன்னும் முடிவடையாத நிலையில் மகிழ்திருமேனி அடுத்ததாக இயக்கப் போகும் திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வரும் நடிகர் விக்ரமை வைத்து மகிழ்திருமேனி தனது அடுத்த படத்தை இயக்கப் போகின்றாராம். தற்போது நடிகர் விக்ரம் அருண் குமார் இயக்கத்தில் வீரதீர சூரன் படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் அடுத்ததாக மகிழ்திருமேனியுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

இதையும் படிங்க: நா செகண்ட் ஹேண்ட்டா?!.. டைவர்ஸ் ரொம்பவே வலிச்சது!.. திடீரென வைரலாகும் சமந்தா!..

இப்படத்தின் தயாரிப்பு மற்றும் நடிகர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த செய்தி வெளியானது முதலே ரசிகர்கள் பலரும் விக்ரமுக்கு அறிவுரை கூறி வருகிறார்கள். அஜித்தின் விடாமுயற்சிக்கே இன்னும் விடிவு காலம் பிறக்காமல் இருந்து வரும் நிலையில் நீங்களும் அவரின் படத்தில் கமிட்டானால் அடுத்த இரண்டு வருடங்களுக்கு நீங்கள் எந்த படத்திலும் நடிக்க முடியாது என்று அட்வைஸ் கூறி வருகிறார்கள்.

ramya suresh

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.