Vidamuyarchi: எத்தன தடை வந்தாலும் சமாளிப்போம்.. விடாமுயற்சிக்காக களத்தில் இறங்கிய அஜித்
Vidamuyarchi: அஜித் நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. இந்தப் படத்தின் டீஸர் சில தினங்களுக்கு முன்புதான் ரிலீஸானது. அதோடு ரசிகர்களின் வரவேற்பையும் பெற்றது. டீஸர் வெளியாகி கிட்டத்தட்ட 1 மில்லியன் வியூவ்ஸ்களை தாண்டியிருக்கிறது. படத்தின் டீஸர் ஒரு ஹாலிவுட் தரத்தில் இருப்பதாக அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.
படம் பொங்கல் ரிலீஸாக திரைக்கு வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு அஜித்தின் குட் பேட் அக்லியும் பொங்கல் ரிலீஸாகத்தான் வரவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஒரே நேரத்தில் அஜித்தின் இரு படங்கள் அதுவும் இந்த சூழ் நிலையில் ரிலீஸாவது அந்தளவு சாத்தியமில்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் படத்தின் டீஸர் வெளியானதில் இருந்தே விமர்சனங்களும் எழுந்தன.
இதையும் படிங்க: சூர்யா 45 திரைப்படத்தில் சூர்யா இந்த ரோலில் நடிக்கிறாரா?.. அட நம்ம திரிஷாவுமா?..
1997 ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படமான பிரேக் டவுன் படத்தின் ரீமேக்தான் விடாமுயற்சி என்ற இது நாள் வரை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இதனால் பிரேக் டவுன் படக்குழு விடாமுயற்சி படக்குழுவிடம் நஷ்ட ஈடாக 150 கோடி கேட்டிருக்கின்றனர். இது ஒரு புறம் இருக்க விடாமுயற்சி படத்தின் டப்பிங் பணிகளில் அஜித் ஈடுபட்டு வருகிறாராம்.
டிசம்பர் 13 ஆம் தேதி படத்தின் சில காட்சிகளும் ஒரு பாடலும் படமாக்கப்பட இருக்கிறதாம். அது முடிந்து எப்படியாவது படத்தை ஜனவரி 10 ஆம் தேதி ரிலீஸுக்கு கொண்டு வர வேண்டும் என அஜித் உட்பட ஒட்டுமொத்த படக்குழுவும் கடுமையாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: புஷ்பா 2 கொடுத்த ஹைப்புக்கு வொர்த்தா?.. படம் எப்படி இருக்கு?.. முழு விமர்சனம் இதோ!..
இதற்கிடையில் அஜித் கார் ரேஸிலும் தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறார். அதோடு குட் பேட் அக்லி படத்திலும் நடித்து வருகிறார். அந்தப் படத்தின் படப்பிடிப்பும் முக்கால் வாசி முடிந்த நிலையில் மே 1 ஆம் தேதி அந்தப் படத்தை ரிலீஸ் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.