Categories: Cinema History Cinema News latest news

தடை அதை உடை… விடாமுயற்சியில் முன்பே ஜெயிச்சுக் காட்டிய அஜித்… தாணுவே மிரண்ட சுவாரஸ்ய சம்பவம்..!

Vidamuyarchi: அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படப்பிடிப்பு ஒருவழியாக துபாயில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால் விடாமுயற்சியில் நடிப்பது என்னவோ இப்போது தான் ஒரு நேரத்தில் தன்னுடைய வாழ்க்கையிலேயே செய்து காட்டியவர் தான் அஜித்.

துபாயில் 60 நாட்கள் நடக்கும் விடாமுயற்சி படப்பிடிப்பில் ஒருவழியாக அஜித் இணைந்து விட்டார். மிகப்பெரிய பைக் ட்ரிப்பை முடித்து விட்டு மீண்டும் நடிப்புக்கு திரும்பு இருக்கிறார். ஆனால் ஒரு காலத்தில் அஜித் எப்படி தன் சினிமாவின் மீது பக்தி கொண்டு இருப்பார் என்பதற்கு அடையாளமாக ஒரு விஷயம் இருக்கிறது.

இதையும் படிங்க: ஒரு மாதத்தில் மூணு படத்தின் ரிலீஸ்… வருஷத்துக்கு 28 படம் நடித்த அந்த கோலிவுட் நடிகை… அடத்தூள்..!

கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன் என்ற படத்தில் தபுக்கு ஜோடியாக அஜித் ஒப்பந்தமானார். ராஜீவ் மேனன் இயக்கிய இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், மம்முட்டி, அப்பாஸ் ஆகியோர் நடித்திருந்தனர். வளர்ந்து வந்த அஜித்துக்கு இந்த வாய்ப்பு மிகப்பெரிய உச்சத்தினை கொடுக்கும் என்பதை நம்பினார்.

ஆனால் எதிர்பாராத விதமாக அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க சில நாட்களே இருந்த நிலையில் ஒரு விபத்தில் சிக்கினார். ஆனால் படப்பிடிப்பினை உடனே துவங்க வேண்டிய நிலை இருந்தது. இதனால் தயாரிப்பாளர் தாணு அஜித் கதாபாத்திரத்திற்கு வேறு நடிகர்களை தேடும் பணியில் இறங்கிவிட்டார். 

இதையறிந்த அஜித் வீல் சேரிலேயே தாணு அலுவலகத்துக்கு வந்தவர். எனக்கு ஒரே வாரம் டைம் தாருங்கள். அடுத்த வாரம் நான் நடந்து வருகிறேன். என் ரோலை மாற்ற வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டாராம். அதன்படி அடுத்த வாரம் நடந்தே வந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டாராம்.

இதையும் படிங்க: தலைவர் 170 பூஜை போட்டாச்சு!.. ரஜினி பக்கத்துல பாருங்க நம்ம துணிவு ஹீரோயின் தூளா நிக்குறாங்க!..

Published by
Akhilan