Connect with us
vidamuyarchi

Cinema News

Vidamuyarchi: காலர் டியூனை செட் பண்ணிக்கோங்க.. வைரலாகும் ‘விடாமுயற்சி’ படத்தின் தீம் மீயுஸிக்

Vidamuyarchi: எந்த ஒரு அப்டேட்டும் இல்லாமல் யாரும் எதிர்பாராத நேரத்தில் விடாமுயற்சி படத்தின் அப்டேட் வெளியாகி இன்றுவரை அது தான் இணையத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது. அந்த அளவுக்கு படத்தின் டீசர் அனைவரையும் வெகுவாக ஈர்த்து இருக்கிறது. ஹாலிவுட் தரத்தில் வெளியான இந்த விடாமுயற்சி படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் இன்றுவரை நல்ல ஒரு ரெஸ்பான்ஸை பெற்று வருகிறது.

பெரிய நடிகர்களின் படங்களின் அப்டேட் வெளியாகிறது என்றால் அதற்கு முன்பாகவே ஒரு பரபரப்பு அனைவரின் மத்தியிலும் தொற்றிக் கொள்ளும். ஆனால் அஜித் நடித்த விடாமுயற்சி படத்தை பொறுத்த வரைக்கும் அந்த ஒரு பில்டப் எதுவுமே இல்லை. அதுவே இந்த படத்திற்கு பிளஸ் ஆக மாறி இருக்கிறது. படத்தின் ரிலீஸ் தேதி எப்போது என அனைவரும் கேள்வி எழுப்பி இருந்த நிலையில் இந்த டீசரிலேயே அதற்கான பதிலை கொடுத்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க: கல்கி பாகுபலி கேஜிஎஃப் எல்லாம் ஓரமாபோங்க!.. ப்ரீ புக்கிங்கில் பட்டையை கிளப்பும் புஷ்பா 2..!

வரும் பொங்கல் அன்று படம் ரிலீஸ் ஆகும் என உறுதியாக அறிவித்து விட்டனர் விடாமுயற்சி பட குழு. அதே நேரத்தில் குட் பேட் அக்லி. திரைப்படமும் பொங்கல் அன்றுதான் ரிலீஸ் ஆகும் என சொல்லப்பட்டு வந்த நிலையில் அது மே ஒன்றாம் தேதி அஜித்தின் பிறந்தநாள் சமயத்தில் ரிலீஸ் ஆகும் என்ற ஒரு தகவலும் இப்போது வைரலாகி வருகின்றது.

ஆனால் குட் பேட் அக்லி படத்தின் தயாரிப்பாளர் சொன்ன தேதியில் அதாவது பொங்கல் ரிலீஸ் ஆக தான் குட்  பேட் அக்லி வெளியாக வேண்டும் என உறுதியாக இருப்பதாக தெரிகிறது. அதனால் விடாமுயற்சி பட டீமும் குட் பேட் அக்லி பட டீமும் பேச்சுவார்த்தையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் விடாமுயற்சி படத்தை பற்றிய ஒரு புதிய அப்டேட் இன்று வெளியாகி இருக்கிறது.

இதையும் படிங்க: ஒரு வழியா பஞ்சாயத்து முடிஞ்சிருச்சு போலயே!.. மீட்டிங் போட்டு கன்ஃபார்ம் பண்ண இளையராஜா-ரஜினி!

இந்த படத்திற்கு அனிருத் இசை என்பது அனைவருக்குமே தெரியும். இந்த படத்திற்கான ஒரு தீம் மியூசிக் இன்று வெளியாகி இருக்கிறது. அதை லைக்கா நிறுவனம் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள் .அஜித் அனிருத் காம்போ என்றாலே தெறிக்க விடும் அளவில் தான் இருக்கும். அதில் பெரிய எதிர்பார்ப்புடன் இருக்கும் விடாமுயற்சி படத்திற்கான தீம் மியூசிக் படுமாஸாக இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும் .இதிலிருந்தே அஜித் ரசிகர்கள் இனிமேல் தங்களது மொபைல் போனில் இந்த மியூசிக்கைத் தான் காலர் டியூன் ஆக வைப்பார்கள் என்று நிச்சயமாக சொல்ல முடியும்.

இதோ அந்த மியூஸிக் லிங்க்: https://www.instagram.com/reel/DDG0BxRydgg/?igsh=MTE4aTBwa3dlaHR0cg==

google news
Continue Reading

More in Cinema News

To Top