விடாமுயற்சி டிராப்!.. பகீர் கிளப்பிய பிரபல பத்திரிக்கையாளர்..
“ஏகே 62” புராஜெக்ட்டில் இருந்து விக்னேஷ் சிவன் வெளியேறிய பிறகு இயக்குனர் மகிழ் திருமேனி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படத்திற்கு “விடாமுயற்சி” என்ற டைட்டிலும் வைக்கப்பட்டது.
“விடாமுயற்சி” அறிவிப்பு வெளியாகி ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில் இது வரை “விடாமுயற்சி” திரைப்படத்தின் படப்பிடிப்பை குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை. இதனிடையே அஜித்குமார் “பரஸ்பர மரியாதை பயண”த்தில் மிகவும் பிசியாக இறங்கிவிட்டார். ஏற்கனவே இந்த பயணத்தில் இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களையும் பூடான், நேபாள் ஆகிய நாடுகளையும் பைக்கில் சுற்றிவிட்டு சென்னை திரும்பிவிட்டார் அஜித்.
அதன் பின் “விடாமுயற்சி” திரைப்படத்தின் பணிகள் முடிந்த பிறகு அஜித் தனது பரஸ்பர மரியாதை பயணத்தை மீண்டும் தொடங்கவுள்ளார் என்ற அறிவிப்பு வெளிவந்தது. இதனிடையே “ஏகே மோட்டோ ரைடு” என்ற பெயரில் ஒரு பைக் சுற்றுலா நிறுவனத்தை அஜித்குமார் தொடங்கவுள்ளார் என்ற அறிவிப்பும் வெளிவந்தது.
இவ்வாறு அஜித்தின் பைக் சுற்றுலா குறித்த அறிவிப்புகளே தொடர்ந்து வெளிவருகிறதே தவிர, “விடாமுயற்சி” திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு வெளிவரவே இல்லை. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு, “விடாமுயற்சி” குறித்த ஒரு அதிர்ச்சியான தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.
“விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் 7 ஆம் தேதி தொடங்கவில்லை என்றால் ஒன்று டிராப் ஆகிவிடும். இல்லை என்றால் தயாரிப்பு நிறுவனம் கைமாறிவிடும்” என கூறியிருக்கிறார். இந்த தகவல் இணையத்தில் அஜித் ரசிகர்களிடையே காட்டுத்தீ போல் பரவி வருகிறது.
இதையும் படிங்க: ரசிகரின் வீட்டுக்கு ஆட்டோவில் சென்ற நடிகர் சூரி; ரசிகர் குடும்பத்தினர் திடீர் ‘ஷாக்’