விடாமுயற்சிக்கு விட்டாச்சு லீவு!.. இனி ‘தல’ய பிடிக்க முடியாது.. தல முழுக வேண்டியதுதான்!..

ajith
Vidamuyarchi Movie: ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளான திரைப்படம் ‘விடாமுயற்சி’. காத்திருந்து காத்திருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்புதான் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்தது. முழு படத்தையும் அங்கேயே முடிக்க படக்குழு திட்டமிட்டார்கள். ஆனால் இயற்கையின் சீற்றம் அவர்களை விடவில்லை.
கடுமையான பனிப்பொழிவு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இருந்தாலும் மறுபடியும் படப்பிடிப்பை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் லைக்காவின் பொருளாதார நெருக்கடியும் மற்றுமொரு காரணமாக அமைந்தது. இதனால் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் தள்ளி வைத்தார்கள். முதலில் வேட்டையன் திரைப்படத்தை முடித்துவிட்டு அதை பிஸினஸ் லெவலில் கொண்டு போகும் போது அதன் மூலம் ஏகப்பட்ட கோடிகள் வியாபாரம் கிடைக்கும்.
இதையும் படிங்க: கமல் நடிப்பில் களைகட்டிய வெள்ளி விழா படங்கள்… கோவை சரளாவுடன் அசத்திய சதிலீலாவதி!..
அதை வைத்து விடாமுயற்சி படத்தை முடித்துவிடலாம் என்று எண்ணியிருந்தார்கள். மேலும் தேர்தல் முடிந்து அடுத்த நாளே விடாமுயற்சி படத்தின் எஞ்சியிருந்த படப்பிடிப்பை ஆரம்பித்திவிடலாம் என்றும் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் சமீபத்தில் கிடைத்த தகவலின் படி வரும் 27 ஆம் தேதி படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டிருந்தார்களாம்.
ஆனால் அதுவும் இப்போது இல்லையாம். ஏனெனில் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பே மே 12 வரை இருக்கும் பட்சத்தில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு நடக்காது என்று சொல்லப்படுகிறது. வேட்டையன் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்த பிறகே விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையில் சும்மாவே அஜித் ஊர் ஊராக சுற்றக்கூடியவர்.
இதையும் படிங்க: சின்ன பட்ஜெட்டில் பல கோடி லாபம்!. ரஜினி – கமலையே அதிரவைத்த கேப்டனின் டாப் 5 திரைப்படங்கள்!..
இதில் மறுபடியும் பிரேக் என்றா சொல்லவா வேண்டும். இதை அறிந்த ரசிகர்கள் விடாமுயற்சி என எந்த நேரத்தில் பெயர் வைத்தார்களோ ஓராண்டுக்கும் மேலாக முயற்சி எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.