அப்டேட்டா கேட்கிறீங்க.. இந்தா வாங்கிக்கோங்க!.. விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில் லீக் ஆகிடுச்சு!..
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வந்த நிலையில், சென்னைக்கு படக்குழு திரும்பியது. சில வாரங்கள் கடந்த நிலையில், இன்னமும் விடாமுயற்சி படத்தின் தொடங்கவில்லை என தகவல்கள் வெளியான நிலையில், படக்குழுவுக்கு இடையே பிரச்சனை வெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சமீபத்தில் படத்தை பார்க்க தியேட்டருக்கு சென்ற ரசிகர்கள் விடாமுயற்சி டைட்டில் வெளியிட்டு 300 நாட்கள் ஆகிறது லைக்காவை காணும் என பதாகைகளை ஏந்தி அப்டேட் கேட்டு பஞ்சாயத்தைக் கூட்டினர்.
இதையும் படிங்க: ஆஹா என் ஆண்டவரை பார்த்துட்டேன்!.. மஞ்சுமெல் பாய்ஸ் ஃபைனல் கிளைமேக்ஸ் இதுதான்.. இயக்குநர் செம போஸ்ட்!
அஜித் ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக மறைமுகமாக முயற்சி படத்தின் சூட்டிங் நடக்கும் ஸ்டில் ஒன்றை படக்குழுவினரை கசிய வைத்திருப்பதாக தற்போது வெளியாகியிருக்கும் போட்டோவை பார்த்து நெட்டிசென்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
மிகப்பெரிய வாகனத்தில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள மலையடிவாரம் பக்கத்தில் நடைபெற்ற வருவதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. கூடிய சீக்கிரமே விடாமுயற்சி படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டு படத்தை ரிலீஸ் செய்யும் முயற்சியில் மகிழ் திருமேனி மற்றும் லைக்கா திட்டமிட்டு இருப்பதாக கூறுகின்றனர்.
இதையும் படிங்க: ஜெயிலர் 2வா?.. அடபோங்கயா!.. தீவில் ஜாலி பண்ணும் நெல்சன்.. கூட யாரெல்லாம் போயிருக்காங்க தெரியுமா?
விடாமுயற்சி திரைப்படம் அஜித் ரசிகர்களுக்கும் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்கு பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் கொடுக்கும் படமாக அமையும் இணையத்தில் பார்க்கப்படுகிறது. எல்லாம் சரி திரிஷா திரும்ப ஷூட்டிங் வந்து விடுவாரா என்கிற கேள்வியும் கடைசியில் எழத்தான் செய்கிறது.
COPYRIGHT 2024
Powered By Blinkcms