இதுதான் லாஸ்ட்!... இறுதிக்கட்டத்தை எட்டிய விடாமுயற்சி!.. மிஸ் ஆனா கதையே முடிஞ்சது!..

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், திரிஷா, அர்ஜூன் உள்ளிட்ட பலரும் நடித்து 4 மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட திரைப்படம்தான் விடாமுயற்சி. இப்போது வரை இப்படத்தை முடிக்க முடியாமல் மகிழ் திருமேனி விடாமல் முயற்சி செய்து வருகிறார். லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு அசர்பைசான் நாட்டில் துவங்கியது. ஆனால், பனிப்புயல், மழை என பல காரணங்களால் இப்படம் தடை பட்டுக்கொண்டே வந்தது. பொன்னியின் செல்வனுக்கு பின் திரிஷாவின் மார்க்கெட் மேலே போன நிலையில், இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இதையும் படிங்க: கேப்டன் பேச்சை கேட்காத இயக்குனர்… கோபப்படாமல் விஜயகாந்த் சொன்னது இதுதான்!…

ஆனால், அவரின் கால்ஷீட் வீணாக போனதால் மணிரத்னம் இயக்கும் தக் லைப் படத்திற்கு போய்விட்டார். ஒருபக்கம், ஒரே நேரத்தில் வேட்டையன், விடாமுயற்சி என 2 படங்களை தயாரித்து வருவதால் பொருளாதார சிக்கலில் சிக்கிய லைக்கா நிறுவனம் வேட்டையன் படத்தை முடித்து விட்டு விடாமுயற்சிக்கு போவோம் என முடிவெடுத்தது.

இதனாலும், பல நாட்கள் படப்பிடிப்பு நடக்கவில்லை. வேட்டையன் படத்தை வேகமாக முடித்து அதை வியாபாரம் செய்து அதன்மூலம் வரும் பணத்தை வைத்து விடாமுயற்சி படத்தை துவங்க லைக்கா திட்டமிட்டது. இதற்கிடையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க ஒப்புகொண்டார் அஜித்.

இதையும் படிங்க: போதுமப்பா விட்ருங்க.. சீக்கிரம் கோட் படத்தினை கழட்டிவிட போகும் தளபதி விஜய்… அடுத்த ப்ளான் என்ன தெரியுமா?

அதோடு, மே மாதம் இறுதி வரைதான் விடாமுயற்சிக்கு கால்ஷீட் கொடுப்பேன். படத்தை முடிக்காவிட்டால் ஜூன் மாதம் குட் பேட் அக்லிக்கு போய்விடுவேன்’ என கூறிவிட்டார். இந்நிலையில், மகிழ் திருமேனியும், அப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷூம் லோகேஷன் பார்ப்பதற்காக மீண்டும் அசர்பைசான் நாட்டுக்கு போயிருக்கிறார்கள்.

இதுதான் கடைசி செட்யூல் எனவும், படத்தின் இறுதிக்காட்சி வரை முடித்துவிட்டு படக்குழு சென்னை திரும்ப திட்டமிட்டிருக்கிறது. ஆனால், இப்படத்தின் எல்லா நடிகர்களும் நடிக்க வேண்டி இருப்பதால் ஒருவர் சொதப்பினால் கூட படப்பிடிப்பை முடிக்க முடியாமல் போகும். எனவே, அனைவரிடமும் கால்ஷீட்டை வாங்கும் முயற்சியில் படக்குழு ஈடுபட்டிருக்கிறது.

Related Articles
Next Story
Share it