ஓ இதான் மேட்டரா? தெறிக்கவிட்ட விடாமுயற்சி டீம்… உங்க மனசே மனசு சார்…
Vidamuyarchi: அஜித்தின் நடிப்பில் வெளியாக இருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று இன்று வெளியாக இருக்கும் என கூறப்பட்ட நிலையில் அதன் போஸ்டரை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு படக்குழு ஒன்று செய்திருக்கிறது.
துணிவு திரைப்படத்தை முடித்துக் கொண்ட நடிகர் அஜித் தன்னுடைய அடுத்த படத்தின் பெயரை மட்டுமே அறிவித்தார். படத்தின் பெயர் வந்து விட்டால் படமும் விரைவில் முடிந்துவிடும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
இதையும் படிங்க: விஜய் ரசிகர்களுக்கு இன்னும் 2 நாளில் அடுத்த சேதி காத்திருக்கு… ஆனால் ஃபீல் பண்ணுவீங்க!..
பல மாதங்களாக ஷூட்டிங் செல்லாமல் உலக நாடுகளுக்கு பைக் டிராவல் செய்து கொண்டிருந்தார். ஒரு வழியாக அவரை அழைத்து வந்து படப்பிடிப்பை தொடங்க அஜர்பைஜானில் விடாமுயற்சியின் முக்கிய ஷூட்டிங் நடந்தது. ஆனால் அங்கு காலநிலை சரியாக இல்லாததால் தொடர்ச்சியாக தள்ளிப்போனது.
எப்போதும் ஒரு படத்தை முடித்து விட்டே இன்னொரு படத்திற்கு செல்லும் நடிகர் அஜித் இந்த பிரச்சினையால் விடாமுயற்சி சூட்டிங் இருக்கும்போதே குட் பேட் அக்லி திரைப்படத்தில் தன்னுடைய சூட்டிங் தொடர்ந்தார். இந்நிலையில் விடாமுயற்சி திரைப்படத்தின் ஷூட்டிங் கடைசி கட்டத்தை நெருங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
வலிமை திரைப்படத்திலிருந்து அஜித் இடம் ஒரு பழக்கம் இருக்கிறதாம். படத்தில் இருக்கும் எல்லா நடிகர்களுக்கும் சமமான புரமோஷன் செய்யப்பட வேண்டும் என்பதுதான் அது. அதை தற்போது விடாமுயற்சியிலும் படக்குழு கையாண்டு வருகிறது. தொடர்ச்சியாக படத்தில் நடிக்கும் முக்கிய கதாபாத்திரங்களுக்கான போஸ்டர் வெளியிடப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: விஜய் என்னிடம் நாலுமுறை அப்படி பண்ணார்… சங்கீதா கிரிஷை சங்கடப்படுத்திய சம்பவம்…