பழைய அஜித் இஸ் பேக்!.. க்யூட்னஸ் ஓவர்லோட்!... வெளியானது விடாமுயற்சி 3வது போஸ்டர்!..
லைக்கா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்க கடந்த பல மாதங்களாக உருவாகி வரும் திரைப்படம்தான் விடாமுயற்சி. துணிவு படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து அஜித் நடிக்க துவங்கிய திரைப்படம் இது. விக்னேஷ் சிவன் இயக்குனர் என அறிவிக்கப்பட்டு பின்னர் அவர் வெளியேறி மகிழ் திருமேனி உள்ளே வந்தார்.
ஆனால், மகிழ் திருமேனி மிகவும் மெதுவாக வேலை செய்பவர். இதுதான் விடாமுயற்சி படத்திற்கு பெரும் பிரச்சனையாக மாறியது. அசர்பைசான் நாட்டில் படப்பிடிப்பு துவங்கியது. ஆனால், பல காரணங்களால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. மழை, பனிப்புயல், லைக்காவின் நிதிநெருக்கடி என பல காரணங்கள் சொல்லப்பட்டது.
இந்த படத்தில் அஜித்துக்கு மனைவியாக திரிஷாவும் வில்லனாக அர்ஜூனும் நடித்து வருகிறார்கள். பல நாட்கள் படப்பிடிப்பே நடக்காமல் நடிகர், நடிகைகளை சும்மா உட்கார வைக்க அஜித், திரிஷா, அர்ஜூன் ஆகியோர் இயக்குனர் மீது கோபப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது.
ஒருபக்கம் படம் துவங்கி பல மாதங்கள் ஆகியும் எந்த அப்டேட்டும் வெளிவராமல் இருக்க அஜித்தின் ரசிகர்கள் விரக்தி அடைந்தனர். ஒருகட்டத்தில் கடுப்பாகி அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்கப்போனார். அதன்பின்னரே விடாமுயற்சி ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது.
அஜித் கையில் ஒரு பையை வைத்துக்கொண்டு சாலையில் நடந்து வருவது போல வடிவமைக்கப்பட்ட அந்த போஸ்டர் அஜித் ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை. எனவே, அஜித் துப்பாக்கியை கையில் வைத்துக்கொண்டு ஸ்டைலாக போஸ் கொடுப்பது போல ஒரு போஸ்டரை வெளியிட்டனர்.
அது ரசிகர்களுக்கு பிடித்திருந்தது. இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் 3வது போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டிருக்கிறது. ஸ்டைலான லுக்கில் அஜித் நின்று கொண்டிருக்க, திரிஷா அமர்ந்துகொண்டிருப்பது போல வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த போஸ்டர் ரசிகர்களை கவரவே ‘லவ்லி போஸ்டர்’ என கமெண்ட் பதிவிட்டு வருகிறார்கள்.