Vidamuyarchi: மோசமாக திட்டு வாங்கும் மகிழ் திருமேனி… அது ரியலு இல்லங்கோ.. ரீலு!..

by Akhilan |   ( Updated:2024-11-11 10:40:07  )
Vidamuyarchi
X

Vidamuyarchi

Vidamuyarchi: விடாமுயற்சி திரைப்படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி டெல்லி கணேஷ் இறப்பால் அப்டேட் தள்ளி போயிருப்பதாக தெரிவித்திருப்பது ரசிகர்களுக்கு பெரிய அளவில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் இதில் ரசிகர்கள் ஒரு விஷயத்தை மறந்து விட்டதாக தற்போது தகவல்கள் கசிந்து இருக்கிறது.

கடந்த ஆண்டு பொங்கல் தினத்தில் விஜயின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு திரைப்படங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதைத் தொடர்ந்து இருவரும் அடுத்தடுத்த படங்களில் உடனடியாக ஒப்புக்கொண்டனர். இதில் விஜய் லியோ மற்றும் கோட் என இரண்டு படங்களை முடித்துவிட்டார்.

இதையும் படிங்க: Sarathkumar: ஷூட்டிங்கில் கெட்டுப் போன சாப்பாட்டை கொடுத்த படக்குழு!… நாட்டாமை செய்த தரமான சம்பவம்!..

ஆனால் அஜித் விடாமுயற்சி திரைப்படத்தினை ஒப்புக்கொண்டு அதில் கலந்து கொள்ளாமல் இழுத்தடித்து வந்தார். இயக்குனர் பிரச்சனை முடிந்து படப்பிடிப்பு தொடங்கவே கடந்த ஆண்டு கடைசி வரை ஆகிவிட்டது. இருந்தும் கால சூழ்நிலையால் படப்பிடிப்பு பலமுறை தள்ளிப்போனது. இதனால் படப்பிடிப்பு பல மாதங்கள் இழுத்தடிக்கப்பட்டது.

இப்படம் முடியும் நிலையில் இல்லாததால் உடனடியாக அஜித் தன்னுடைய அடுத்த படத்தையும் தொடங்கினார். ஒரு வழியாக பல கட்ட போராட்டங்கள் முடிந்து விடாமுயற்சி திரைப்படத்தின் டப்பிங் பணிகள் நடந்து வருகிறது. இத்திரைப்படத்தை அடுத்த ஆண்டு தைப்பொங்கல் தினத்தில் வெளியிடப்பட முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் அடுத்த கட்ட அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்தனர். படத்தின் டீசர் வெளியீடு எப்போது என கேள்வி எழுந்த நிலையில் தற்போது மகிழ்திருமேனி எக்ஸ் வலைதள கணக்கில் இருந்து டீசர் அப்டேட் இன்று வந்திருக்க வேண்டும். ஆனால் டெல்லி கணேஷ் இறப்பால் அதை தள்ளி வைத்திருப்பதாக தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: K.Balachander: நடிகரின் நம்பிக்கையைப் பொய்யாக்கிய பாலசந்தர்… யார்…? என்ன படம்னு தெரியுமா?

இதை பார்த்த ரசிகர்கள் அவரை மேலும் மோசமாக விமர்சித்து வந்தனர். இங்க எல்லாம் இயக்குனர் தானா ஏன் இத்தனை இழுத்தடிப்பு செய்கிறீர்கள் என கேள்விகளையும் எழுப்பி வந்தனர். ஆனால் இது ஒரு புறம் இருக்க எந்த ரசிகர்களுமே அது உண்மையான கணக்கு தானா என்பதை சோதிக்கவில்லை.

லைக்கா ப்ரொடக்ஷன் வெளியிடப்படும் பதிவில் மற்ற பிரபலங்களுக்கு உண்மையான கணக்கை டேக் செய்து வருகிறது. ஆனால் அஜித் மற்றும் மகிழ் திருமேனி இருவருக்கும் ஹேஸ்டேக் மட்டுமே போடப்பட்டு வருகிறது. இதனால் ரசிகர்கள் உண்மையான கணக்கு என நினைக்கும் எக்ஸ் வலைத்தளம் மகிழ்திருமேனி உடையது இல்லை என்பது நிரூபணம் ஆகிறது. திட்டும்போது அது உண்மை கணக்குதானா என்பதையாவது சோதித்து செய்ய மாட்டீங்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

எக்ஸ் கணக்கு: https://x.com/MagizhDiroffl/status/1855550573959106878

Next Story