Vidamuyarchi: அஜித் நடிப்பில் வெளியாக இருக்கும் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் காட்சிகள் ரிலீஸான நிலையில் அதுகுறித்து மேலும் சில சுவாரஸ்ய தகவல்களையும் பிஆர்ஓ சுரேஷ் சந்திரா தற்போது வெளியிட்டு இருக்கிறார்.
இயக்குனருக்கே அத்தனை களேபரம். விடாமுயற்சி என்ற டைட்டிலை மட்டுமே ரிலீஸ் செய்து விட்டு படக்குழு ஷூட்டிங் செல்லாமல் பல மாதங்களாக சும்மா இருந்தது. ஒருவழியாக ஷூட்டிங் கிளம்பிய அஜித் ரசிகர்களே இல்லாத இடத்துக்கு செல்ல வேண்டும் என தயாரிப்பு தரப்பிடம் கோரிக்கை வைத்தார். லைகா புரோடக்ஷன் இப்படத்தினை தயாரித்து வருகிறது.
இதையும் படிங்க: 33 முறை விஜயகாந்துடன் மோதிய பிரபு படங்கள்!.. அதிகமுறை ஜெயித்தது இளைய திலகமா? புரட்சிக்கலைஞரா?..
அஜர்பைஜானின் காலசூழ்நிலை சரியில்லாமல் போக அடிக்கடி ஷூட்டிங் கேன்சல் ஆனது. இதனால் படப்பிடிப்பு கால்ஷூட் நாட்களையும் தாண்டி போனது. பொறுமையிழந்த அஜித் தன்னுடைய அடுத்த படத்துக்கு தாவினார். ஆதிக்ரவிசந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க இருக்கிறார்.
படப்பிடிப்பில் ஓவர் செலவு, லைகா நிதி பிரச்னை என விடாமுயற்சி முடியுமா? முடியாதா என்ற சந்தேகம் பலரிடமும் இருந்தது. இந்நிலையில் இன்று அஜித் மற்றும் ஆரவ் நடிப்பில் விடாமுயற்சியின் சில காட்சிகள் லீக்கானது. அதில் அதிவேகமாக கார் ஓட்டிவரும் அஜித் நிலைதடுமாறி விபத்தில் சிக்குவார். ரிஸ்கான இந்த காட்சிகளை எந்த டூப்பும் போடாமல் அஜித்தே நடித்து இருந்தது பலரிடம் லைக்ஸை குவித்தது.
இதையும் படிங்க: கண்ணாடி போல சேலை!.. கண்ட அழகையும் காட்டி இழுக்கும் ஸ்ருதிஹாசன்!..
இந்த வீடியோவை ரிலீஸ் செய்த சுரேஷ் சந்திரா கூறுகையில், இந்த காட்சியின் போது கார் தவறி 20 அடியில் விழுந்தது. நல்லவேளையாக அஜித்துக்கு பெரிய அளவில் காயம் எதுவும் ஏற்படவே இல்லை. இந்த வீடியோவை ரிலீஸ் செய்ய காரணம் இருக்கிறது. நாங்கள் கடுமையாக உழைக்கிறோம்.
ஆனால் படம் கைவிடப்பட்டதாக பொய்யான தகவல்கள் நிறைய பரவி வருகிறது. அந்த விஷயம் தான் எங்களை ரொம்ப கஷ்டப்படுத்துகிறது. இது ரசிகர்களுக்கும், படக்குழுவுக்கும் உத்வேகமாக இருக்கும் என்பதற்காகவே இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கோம் என்றார்.
பிரபல காமெடி…
விவாகரத்து வழக்கு…
Simran: தமிழ்…
Suriya 45:…
விடுதலை 2…