ஆல்ரெடி ஆறு மாசமாச்சி!. அஜித் பண்ற வேலையில இன்னும் இழுக்கும்போல!. விடாமுயற்சி பரிதாபங்கள்!..

Published on: October 24, 2023
ajith
---Advertisement---

Vidyamuyarchi: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் அஜித் முக்கியமானவர். ரஜினி, விஜய், அஜித் என முதல் மூன்று இடங்களில் இருப்பவர். துவக்கத்தில் சாக்லேட் பாயாக நடிக்க துவங்கி பல படங்களிலும் அப்படியே நடித்தார். ஒருகட்டத்தில் பில்லா, மங்காத்தா என மாஸ் ஹீரோவாக மாறினார்.

முதல் மூன்று இடத்தில் இருக்கும் நடிகராக இருந்தாலும் இவருக்கு சினிமாவில் நடிப்பது என்பது வெறும் தொழில் மட்டுமே, பைக் ஓட்டுவது, துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்வது, ரிமோட் மூலம் ஹெலிகாப்டரை இயக்குவது போன்றவற்றில் அதிக ஆர்வம் உடையவர் இவர். மூடு வரும்போது மட்டுமே சினிமாவில் நடிப்பார்.

இதையும் படிங்க: ரசிகர்களை ஏமாற்றிய தங்கலான்!… மீண்டும் படையெடுக்கும் விக்ரம்… காரணம் இதுதானாம்!…

சின்ன சின்ன நடிகர்கள் கூட அறிமுகமான முதல் படத்திலேயே தனக்கு ரசிகர் மன்றங்களை வைத்துக்கொள்ளும்போது தன்னுடைய ரசிகர் மன்றங்களை கலைத்தவர் அஜித். துணிவு படத்திற்கு பின் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் ஒரு படம் அறிவிக்கப்பட்டு சில மாதங்களில் அது டிராப் ஆகி பின்னர் மகிழ் திருமேனியை வைத்து விடாமுயற்சி என ஒரு படம் அறிவிக்கப்பட்டது.

அறிவிப்போடு சரி.. அஜித் பைக்கை எடுத்துக்கொண்டு ஊரை சுற்றப்போய்விட்டார். சில மாதங்கள் கழித்து திரும்பிவந்தார். ஒருவழியாய சில நாட்களுக்கு முன்பு அசர்பைசான் என்கிற நாட்டில் படப்பிடிப்பை துவங்கினார். அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கவுள்ளார். வில்லனாக அர்ஜூன் நடிக்கவுள்ளார். இதற்காக படக்குழு அசர்பைசானுக்கு சென்றுள்ளது.

இதையும் படிங்க: திட்டினா திட்டட்டும்!.. அடுத்த வேலையை பார்ப்போம்!… அப்செட்டான விஜய்…

ஆனால், காலை 7 மணிக்கு படப்பிடிப்பு என்றால் இரண்டு மணிநேரம் கழித்துதான் அஜித் வருகிறாராம். அவர்தான் ஹீரோ என்பதால் இயக்குனரால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. எனவே, படப்பிடிப்பு திட்டமிட்டபடி முடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாம். ஒரே கட்டமாக அசர்பைசானில் படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

சில நாட்கள் தாமதமானாலும் படத்தை முடித்துவிட்டே அவர்கள் ஊர் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பல மாதங்கள் கழித்து படப்பிடிப்பு துவங்கிய நிலையில் அஜித்தால் விடாமுயற்சி இன்னும் தாமதமாகும் என கணிக்கப்படுகிறது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.