ஆர்.ஜே பாலாஜியின் சொர்க்கவாசல் காப்பி அடிக்கப்பட்டதா?.. திடீரென வைரலாகும் வீடியோ!..

Published on: November 28, 2024
rj balaji
---Advertisement---

ஆர்.ஜே பாலாஜியின் சொர்க்கவாசல் திரைப்படம் தன்னுடைய ஸ்கிரிப்ட் என்று ஒரு நபர் youtube-ல் வீடியோ வெளியிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் ஆர் ஜே பாலாஜி. வானொலியில் ஆர்.ஜே ஆகவும், கிரிக்கெட் வர்ணனையாளராகவும் இருந்த ஆர் ஜே பாலாஜி எல்கேஜி என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து மூக்குத்தி அம்மன், வீட்டில விசேஷம் உள்ள திரைப்படங்களை இயக்கி இயக்குனராகவும் மாறினார்.

இதையும் படிங்க: கோலாகலமாக நடந்த வெற்றிவசந்த் – வைஷ்ணவி திருமணம்… வைரலாகும் புகைப்படங்கள்

தொடர்ந்து சினிமாவில் இயக்குனராக இருந்து வரும் ஆர்.ஜே பாலாஜி மற்ற இயக்குனர்களின் படங்களிலும் கவனம் செலுத்தி நடித்து வருகின்றார். அடுத்ததாக சூர்யாவை வைத்து சூர்யா 45 என்கின்ற திரைப்படத்தை இயக்குகின்றார். இப்படத்தின் பூஜை நேற்று பொள்ளாச்சி மாசாணி அம்மன் கோவிலில் சிறப்பாக தொடங்கியது. இந்த திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடிகை திரிஷா நடிக்க இருக்கின்றார்.

இதற்கிடையில் ஆர்.ஜே பாலாஜி சொர்க்கவாசல் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இந்த திரைப்படத்தில் ஆர் ஜி பாலாஜி, கருணாஸ், நட்டி நட்ராஜ், செல்வராகவன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். சிறை சாலையை மையமாக வைத்து இப்படத்தை இயக்கி இருக்கின்றார் சித்தார்த் விஸ்வநாத். ஸ்வைப் ரைட் நிறுவனம் இப்படத்தை தயாரித்து இருக்கின்றது.

sorgavasal
sorgavasal

இப்படத்திற்கு கிறிஸ்டோ சேவியர் இசையமைத்திருக்கின்றார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும் இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. இதனால் ஆர்.ஜே பாலாஜி பல youtube சேனல்களுக்கு தொடர்ந்து பேட்டி கொடுத்து படம் குறித்து புரமோஷன் செய்து வருகின்றார்.

உண்மை கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகி இருப்பதாகவும், ஒரு ஆக்ஷன் திரில்லர் படமாக இந்த திரைப்படம் இருக்கும் என்று ஆர் ஜே பாலாஜி கூறியிருந்தார். இந்நிலையில் இந்த திரைப்படம் நாளை ரிலீசாக உள்ள நிலையில் புதிய பிரச்சனை ஒன்று கிளம்பி இருக்கின்றது. அந்த வகையில் ஒரு யூட்யூப் வீடியோவில் ஒரு நபர் ஆர்.ஜே பாலாஜி நடித்திருக்கும் சொர்க்கவாசல் திரைப்படம் தன்னுடைய ஸ்கிரிப்ட் என்றும், 2019 ஆம் ஆண்டு நான் இந்த படத்தின் முழு ஸ்கிரிப்டையும் தயார் செய்து வைத்திருக்கிறேன்.

இதையும் படிங்க: மரணபயத்த காட்டிட்டான் பரமா! ‘அமரன்’ படத்தால் பீதியில் இருக்கும் சிவகார்த்திகேயன்

படத்தின் ட்ரெய்லர் வெளியான பிறகு எனக்கு மிகவும் குழப்பமாக இருந்தது. எப்படி இது சாத்தியம் என்று அதிர்ச்சி அடைந்து போய் இருக்கின்றேன் என ஒரு நபர் அதில் பேசியிருக்கின்றார். இந்த வீடியோ தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. படம் நாளை ரிலீஸாக உள்ள நிலையில் இப்படி ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

இந்நிலையில் இந்த வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த ப்ளூ சட்டை மாறன் சினிமா விமர்சனங்களுக்கு உடனடி தடை போட துடிப்பவர்கள்.. இப்படியான கதை திருட்டு புகார்கள் வந்தால் மிகத் தாமதமாக அல்லது நடவடிக்கையை எடுக்காமல் இருப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பி இருக்கின்றார்.

ramya suresh

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.