விவாகரத்துக்கு பிறகு முதன்முதலாக வீடியோ வெளியிட்ட ஏ.ஆர் ரகுமான்!.. என்ன சொல்லிருக்காரு தெரியுமா?!…

Published on: November 22, 2024
ar rahuman
---Advertisement---

விவாகரத்துக்கு பிறகு ஏ.ஆர் ரகுமான் முதன்முதலாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார்.

இந்திய சினிமா ரசிகர்களால் இசைப்புயல் என்று அழைக்கப்பட்டு வருபவர் ஏ ஆர் ரகுமான். சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் இவர் தற்போது வரை எந்த ஒரு கிசுகிசுக்களிலும் சிக்காத ஒரு மனிதர். கடந்த சில நாட்களாக இவரின் பேச்சு தான் சமூக வலைதள பக்கங்களில் ஓடிக்கொண்டிருக்கின்றது. அதற்கு காரணம் அவரது மனைவி சாய்ரா வெளியிட்ட விவாகரத்து பதிவுதான்.

இதையும் படிங்க: ‘வேதம் புதிது’ படத்தில் இருந்த சென்சார் பிரச்சினை.. நான் ஆணையிட்டால் ரேஞ்சுக்கு மாஸ் காட்டிய எம்ஜிஆர்

இருவரும் விரைவில் விவாகரத்து செய்து கொள்ள இருக்கிறார்கள். இந்த செய்தி அவரின் ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் நேற்று அந்த மனவேதனைக்கு ஆறுதல் தரும் வகையில் புதிய விருது ஒன்று ஏ ஆர் ரகுமானுக்கு அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த ஆண்டு பேன் இந்தியா அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான திரைப்படம் கோட் லைஃப்.

பிருத்விராஜ்  நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. ஆடுஜீவிதம் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். பாலைவனத்தில் நடப்பதை போன்று, வசனங்கள் குறைவாக படமாக்கப்பட்ட இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமானின் இசை மிகப்பெரிய உயிரோட்டத்தை கொடுத்திருந்தது. இப்படம் உலக சினிமாக்களை விரும்பும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பாராட்டை பெற்றிருந்தது.

குறிப்பாக இந்த திரைப்படத்தில் இடம் பெற்று இருந்த ‘பெரியோனே ரஹ்மானே’ என்ற பாடல் பலரையும் உருக வைத்திருந்தது. இதைத் தொடர்ந்து ஆடு ஜீவிதம் படத்தின் பின்னணி இசை உலக அரங்கில் பல விருதுகளை வெல்லும் என்று பல சினிமா விமர்சனங்கள் கூறியிருந்தார்கள். அந்த வகையில் ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது சார்பாக ஆடு ஜீவிதம் படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டிருந்தது.

வெளிநாட்டு படங்களின் பிரிவில் இப்படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை பார்த்த பலரும் ஏ ஆர் ரகுமானுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். தனது மனைவியை பிரிய போவதாக அறிவித்திருந்த இந்த நேரத்தில் இப்படி ஒரு விருது வந்திருப்பது அவருக்கு சற்று மன ஆறுதலை கொடுக்கும் என்று ரசிகர்கள் பலரும் கூறி வந்தார்கள்.

இதையும் படிங்க: AR.Rahman: மூத்த மகளிடம் ஏ.ஆர்.ரகுமான் சொன்ன வார்த்தை… அவரைப் போய் தப்பா பேசுறாங்களே..!

அந்த வகையில் இந்த விருதினை அப்படத்தின் இயக்குனர் அந்த நிகழ்ச்சிக்கு சென்று வாங்கியிருந்தார். இதை தொடர்ந்து ஏஆர் ரகுமான் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் ‘இந்த விருதினை பெறுவதில் நான் மிகப் பெருமை அடைகிறேன்.

அதுவும் ஆடுஜீவிதம் திரைப்படத்திற்காக இந்த விருது எனக்கு கிடைத்ததை எண்ணி மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த விருதை எனக்கு வழங்கிய ஹாலிவுட் மியூசிக் மீடியா விருதுக்கு நன்றி. மேலும் என் ரசிகர்களுக்கு இந்த சமயத்தில் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றேன். எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என்று கூறியிருந்தார். இந்த வீடியோவானது தற்போது வைரலாகி வருகிறது.

ramya suresh

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.