லோகேஷ் கனகராஜே புகழ்ந்தாலும் புரோயஜனம் இல்ல.. விரக்தியடைந்த விதார்த்…

by Rajkumar |
vidharth lokesh
X

vidharth lokesh

தமிழ் சினிமாவில் குறைந்த படங்களே நடித்திருந்தாலும் கூட மக்கள் மத்தியில் தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட நட்சத்திரங்களில் நடிகர் விதார்த் முக்கியமானவர். பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா திரைப்படம் மூலமாக இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

vidharth

vidharth

அதற்குப் பிறகு அவருக்கு தமிழ் சினிமாவில் ஓரளவு வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் தொடர்ந்து அவரால் அதிக படங்களில் நடிக்க முடியவில்லை ஏனெனில் மக்கள் மத்தியில் அவருக்கு இருந்த வரவேற்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது இதற்கு காரணமாக இருந்தது. அதன் பிறகு வீரம் திரைப்படத்தில் அஜித்திற்கு தம்பியாக நடித்தார். அதன் பிறகும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

ஓடாத விதார்த் படம்:

தற்சமயம் பேட்டி ஒன்றில் அவர் கூறும்பொழுது அவர் நடித்த திரைப்படங்களிலேயே அவருக்கு மிகவும் பிடித்த திரைப்படம் என்ன என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த விதார்த் ஒரு கிடாயின் கருணை மனு என்கிற திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம்.

சொல்லப்போனால் அது ஒரு சிறப்பான திரைப்படம். இப்போது கூட அந்த படம் எனக்கு பிடித்த படமாகவே இருக்கிறது. ஆனால் மக்கள் மத்தியில் அந்த படத்திற்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட ஒரு பேட்டியில் கூறும்போது கிடாயின் கருணை மனு தனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் என்று கூறினார். ஆனால் பெரும் இயக்குனர்களுக்கு பிடித்த படம் மக்களுக்கு ஏன் பிடிக்கவில்லை என தெரியவில்லை என்று கூறியுள்ளார் விதார்த்.

இதையும் படிங்க: பெரிய ஹீரோ செய்யுற காரியமா இது!.. நண்பன் காதலை உள்ளே புகுந்து கெடுத்த அசோக் செல்வன்…

Next Story