என்னது விடுதலை 2 நாலு மணி நேரமா? இந்தியன் 2-வோட நிலைமை வராமப் பார்த்துக்கோங்க
தமிழ்த்திரை உலகில் மிகப்பெரிய இயக்குனர்களில் ஒருவர் என்றால் அது வெற்றிமாறன். இவர் இலக்கிய சமூக, அரசியல் த்ரில்லர் படமாக விடுதலையின் முதல் பாகத்தை எடுத்துள்ளார். சூரி, விஜய் சேதுபதி நடித்தனர்.
விடுதலை படத்துக்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். ஒன்னோட நடந்தா, காட்டுமல்லி, அருட்பெருஞ்ஜோதி ஆகிய பாடல்கள் இந்தப் படத்தில் உள்ளன. அதிலும் இளையராஜா பாடிய கடைசி இரு பாடல்களும் மாஸ் ரகங்கள்.
இந்தப் படத்தில் கௌதம் மேனனின் நடிப்பு மிரட்டலாக இருந்தது. படத்தில் சூரியின் நடிப்பு அருமை. முதன் முதலாக கதாநாயகனாக சூரி நடித்த படமும் இதுதான். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்புக்குள்ளானது.
இதைத் தொடர்ந்து அந்தப் படத்தின் தொடர்ச்சியை கடந்த ஆண்டில் உருவாக்குவதற்கான வேலைகளில் ஈடுபட்டார். ஆனாலும் அதற்கான படப்பிடிப்பு இன்னும் நடைபெறவில்லை. ஆனால் இந்தப் படத்தைப் பற்றிப் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
விடுதலை படத்தின் 2ம் பாகம் 4 மணி நேரத்தைத் தாண்டியுள்ளதாம். இன்னும் படப்பிடிப்பு முடிய 30 நாள்கள் தேவைப்படுகிறது. வெற்றிமாறன் இந்த 2ம் பாகம் நீளமாக இருப்பதால் இரு பாகங்களாகப் பிரிப்பதைப் பரிசீலித்து வருகிறார்களாம். ஆனால் இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
விடுதலை 2 படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் வாடிவாசல் படத்தையும் வைத்துள்ளார். இந்தப் படத்தைத் தயாரித்தவர் கலைப்புலி தாணு. இந்த ஆண்டு இறுதிக்குள் விடுதலை 2ஐ முடித்து விட்டு வாடிவாசல் வேலைகளையும் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க... தனுஷுக்கே தெரியாத விஷயம்… கர்ணன் படத்தில் ஹிட் அடித்த அந்த காட்சி…
வாடிவாசல் படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக அனிமேட்ரானிக் எபெக்ட்டுகளுக்கான வேலைகள் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் உலகநாயகன் கமல் நடிக்க ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 படம் நீளமாக இருந்ததால் அதை இரு பாகங்களாக்கி இந்தியன் 3 படமாக உருவாக்கினார் ஷங்கர். இதனால் இந்தியன் 2ல் வீரியம் குறைந்து விட்டதால் ரசிகர்கள் அதிருப்தியை அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.