அந்த மாதிரி சீன் இருக்குனு சொல்லவே இல்ல!.. ‘விடுதலை’ பட நாயகி சொன்ன பகீர் தகவல்..
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி நடிப்பில் நேற்று வெளியான படம் தான் விடுதலை திரைப்படம். இந்தப் படம் சமூகத்தில் நடக்கும் பல பிரச்சினைகளை முன் நிறுத்தி சொல்லப்பட்ட படமாக அமைந்திருந்தது. அதுமட்டுமில்லாமல் ரசிகர்களும் இந்தப் படத்தை கொண்டாடி வருகின்றனர்.
முதன் முதலாக சூரி கதாநாயகனாக நடித்தப் படம் என்பதால் அதுவும் ஒரு பெரிய எதிர்பார்ப்பிற்கு காரணமாக அமைந்தது. வழக்கம் போல விஜய்சேதுபதி அவருடைய கதாபாத்திரத்தை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால் முதலில் விஜய்சேதுபதி கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது பாரதிராஜாதானாம்.
ஆனால் வெற்றிமாறன் கதைக்கு இன்னும் வலுவூட்ட விஜய்சேதுபதி நடித்தால் நன்றாக இருக்கும் என இவரை நடிக்க வைத்திருக்கிறார். விசாரணை படத்தை விட பல மடங்கு தாக்கத்தை இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருப்பதாக பல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
எப்படியோ ஒரு தரமான படத்தை வெற்றிமாறன் கொடுத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் கூறிவருகின்றனர். 3 வருட உழைப்பிற்கு கிடைத்த உயரிய அங்கீகாரம் என்றும் கூறுகின்றனர். இந்த நிலையில் ரசிகர்களால் அதிகம் இந்தப் படத்தில் பேசப்படுவது நடிகை தென்றல் nude சீனில் நடித்திருப்பது தான்.
இதைப் பற்றி தென்றலே ஒரு பேட்டியில் கூறும் போது முதலில் போலீஸ் ஸ்டேஷனில் தான் சீன் என்று மட்டும் சொன்னார்கள், ஆனால் அந்த மாதிரி நடிக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லவே இல்லை என்று கூறினார். அதுமட்டுமில்லாமல் நடிக்கும் போது நாம் ஒரு பாதுகாப்பான் இடத்தில் தான் இருக்கிறோம் என்ற உணர்வு தான் இருந்தது என்றும் கூறினார்.
அதே போல் தான் படப்பிடிப்பிலும் இருந்தது என்றும் கூறினார். மேலும் ஆடையில்லாமல் நடிக்கவில்லை, சிஜியில் எடிட் பண்ணி போட்டது தான் அந்த மாதிரி காட்சிகள் எல்லாம் என்றும் வெளிப்படையாக கூறினார். அதே போல் படத்தின் ஒளிப்பதிவாளரான வேல்ராஜும் ‘nude சீன் தானே எனக்கும் ஒன்றும் பிரச்சினை இல்லை என்றே தான் அந்த பொண்ணும் சொல்லுச்சு’ என்று கூறியிருந்தார். அவர்களாகவே விருப்பப்பட்டு நடிச்ச சீன் தான் அதெல்லாம் என்று கூறினார்.