விடுதலை முதல்நாள் வசூலை கூட்டி சொன்ன தயாரிப்பாளர்!.. கெத்து காட்ட இப்படி செய்யணுமா?!..
நேற்று மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான படம் தான் ‘விடுதலை’. இந்தப் படத்தை வெற்றிமாறன் இயக்க சூரி, விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரங்களின் நடித்தனர். படத்தில் பவானி ஸ்ரீ என்ற நடிகையும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் ஜிவி.பிரகாஷின் சகோதரியாம்.
படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியிலும் சரி படத்தை பார்த்த பிரபலங்கள் மத்தியிலும் சரி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த முறையும் வெற்றிமாறன் யார் என்பதை நிரூபித்திருக்கிறார்.தான் எடுக்கும் ஒவ்வொரு படத்திலும் எதாவது ஒரு யுத்தத்தை முன் நிறுத்துவார் வெற்றிமாறன்,
அதே போல் தான் இந்த விடுதலை படத்திலும் அதிகார வர்க்கம் என்ன மாதிரியான செயல்களை செய்கிறது? அதனால் பாதிக்கப்படும் குடும்பங்கள் எப்படி பட்ட சூழ்நிலையை அனுபவிக்கிறது என்பதை மிகவும் நேர்த்தியாக படம் பிடித்து காட்டியிருக்கிறார் வெற்றிமாறன்.
முதலில் விஜய் சேதுபதி நடித்த கேரக்டரில் பாரதிராஜா தான் நடித்தாராம். ஆனால் அவர் உடல் நிலை காரணம் காட்டி வெற்றிமாறனே பாரதிராஜாவை விலக்கி விட்டார் என்று தெரிகிறது. நேற்று பாரதிராஜாவும் படத்தை பார்த்து மனதார வெற்றிமாறனை பாராட்டினார்.
இந்த நிலையில் இந்தப் படத்தோடு முதல் நாள் ரிலீஸான பத்து தல படமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்றே கூறுகின்றனர். மேலும் விடுதலை படத்திற்கு எந்த ஒரு விமர்சனமும் தேவையில்லை மற்றும் அதன் வசூல் விமர்சனமும் தேவையில்லை என்று வலைப்பேச்சு அந்தனன் கூறியிருக்கிறார்.
இதற்கிடையில் விடுதலை படத்தின் தயாரிப்பாளர் முதல் நாள் வசூல் 8 கோடி என்று கூறி பத்திரிக்கைகளில் செய்தி வெளியிட்டுருக்கிறாராம். உண்மையில் படத்தின் முதல் நாள் வசூல் 3 அல்லது 5 கோடி வரை தான் இருக்குமாம். பத்து தல படத்தின் வசூலை கணக்கில் வைத்து அதற்கு இணையான அளவில் சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு பொய்யான கணக்கை காண்பித்திருக்கிறாராம் விடுதலை பட தயாரிப்பாளர்.
இதையும் படிங்க : ட்ரெயினிங் போனப்பையே செம அடி..- விடுதலைக்கு முன்னாடியே சம்பவம் ஆரம்பிச்சிடுச்சு.. ஓப்பன் டாக் கொடுத்த சூரி..!
இதை பற்றி கூறிய வலைப்பேச்சு அந்தனன், படம் எப்பேற்பட்ட படம்? அதை சீர்குலைக்கும் விதமாக இப்படி ஒரு பொய்யான தகவல் எதற்கு? வசூல் எப்படி இருந்தால் என்ன? ஆனால் விடுதலை படம் எல்லாரையும் போய் சென்றடையும் என்று கூறியிருந்தார்.