Connect with us

சூரிக்கு அல்வா கொடுத்த வெற்றிமாறன்.!? பெரிய ஹீரோ கிடைத்தால் இதுதான் நிலைமை.!

Cinema News

சூரிக்கு அல்வா கொடுத்த வெற்றிமாறன்.!? பெரிய ஹீரோ கிடைத்தால் இதுதான் நிலைமை.!

தமிழ் சினிமாவில் தரமான இயக்குனர்களில் ஒருவராக வளர்ந்து நிற்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்.  2007 முதல் 2021 வரையில் மொத்தமாக 5 படங்கள் தான் இயக்கியுள்ளார். அந்த 5 திரைப்படங்களும் தரமானதாக இருக்கும்.

தனது திரைப்பட காட்சி தாம் நினைத்த மாதிரி வருவதற்கு எத்தனை நாட்கள் ஆனாலும், காத்திருந்து படமாக்குவார் இயக்குனர் வெற்றிமாறன். அதனால் தான் அவரது படங்கள் தனித்துவமாக இருக்கிறது.  இவர் படத்தில் கதை தான் ஹீரோ.

பெரும் பொருட்செலவில், தனுஷே தயாரித்து இருந்தாலும் வடசென்னை படத்தில் தனுஷ் அன்பு எனும் கதாபாத்திரமாகவே இருப்பார். அந்தளவுக்கு கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்து இருப்பார் வெற்றிமாறன். அதனால் தான் காமெடி  நடிகர் சூரி நாயகனாக வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்து வரும் விடுதலை திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள் – பறக்கும் எஸ்.எம் எஸ்.! என் வீட்ல இப்போ விஷேசம் இல்ல.! வருத்தத்தில் ஷங்கர்.?!

இந்த படத்தில் முதலில் ஒரு கௌரவ தோற்றத்தில் விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி இருந்தார். அவர் கொஞ்ச நேரம் மட்டுமே வருவார் என கூறப்பட்டது.  ஆனால், தற்போது விசாரித்தால் விஜய் சேதுபதிக்கு கூடுதல் காட்சி ஓடுதுக்கப்பட்டு வருகிறதாம். இதனால் தற்போது நாயகன் சூரியை ஒதுக்கிவிட்டு, விஜய் சேதுபதி படமாக தான் விடுதலை உருவாவதாக கூறப்பட்டு வருகிறது.

எது எப்படியோ நாயகன் துதி பாடும் காட்சிகள் எதுவும் வெற்றிமாறன் படத்தில் இடமில்லை என்பதால், கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் என்பதாலும், யார் ஹீரோவாக இருந்தாலும் வெற்றிமாறன் தான் அங்கு ஜொலிப்பார் என விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top