வெற்றிமாறனால் சூர்யா, ஷங்கருக்கு வந்த இடியாப்ப சிக்கல்?

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் விடுதலை 2. விடுதலை படத்தின் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பால் இப்படத்தினை வெற்றிமாறன் பார்த்துப்பார்த்து செதுக்கி வருகிறார்.

தற்போது விடுதலை 2 படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி வருகின்ற டிசம்பர் 2௦-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக படம் வெளியாக இருக்கிறது.

மேரி கிறிஸ்துமஸ் படத்தினை தொடர்ந்து மீண்டும் ஒரு கிறிஸ்துமஸ் ரேஸில் விஜய் சேதுபதி குதித்துள்ளார். இந்தநிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியால் சூர்யா மற்றும் ஷங்கருக்கு புதிய சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது.

சூர்யாவின் கங்குவா படம் அக்டோபரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வேட்டையன் ரிலீஸ் தேதியால் படம் தள்ளிப்போகலாம் என தெரிகிறது. செப்டம்பரில் வெளியிடலாம் என இருந்த கங்குவா விஜயின் கோட் படத்தால் தள்ளிப்போனது.

இதனால் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியிடலாம் என படக்குழு நினைத்திருந்த நிலையில் விடுதலை 2 படக்குழு அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் தேதியினை லாக் செய்துள்ளனர். இதனால் பண்டிகை தினங்களில் இந்த ஆண்டு கங்குவா படத்தை வெளியிட முடியாது என்பது தெளிவாகிறது.

சூர்யாவின் கேரியரில் பெரும் பொருட்செலவில் உருவான படம் என்பதால் ரிலீஸ் தேதி மிகவும் முக்கியமாக உள்ளது. இதனால் அடுத்து படக்குழு என்ன செய்யப்போகிறது என எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துள்ளனர்.

இது ஒருபுறமிருக்க மறுபுறம் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் கேம் சேஞ்சர் படத்தின் ரிலீஸ் தேதியும் தற்போது தள்ளிப்போக வாய்ப்புகள் இருக்கின்றன. இந்தியன் 2-வால் ஏகப்பட்ட விமர்சனங்களை சந்தித்து வரும் ஷங்கர் இந்த படத்தை தான் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறார்.

தற்போது விடுதலை 2 அறிவிப்பால் சூர்யா, ஷங்கர் இருவரும் தர்ம சங்கடத்திற்கு ஆளாகியுள்ளனர். சரி போனால் போகிறது விடுதலை 2 படத்திற்கு பின்னர் வெற்றிமாறன் வாடிவாசல் பக்கம் திரும்புவார் என எதிர்பார்த்திருந்த சூர்யா ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது.

அது என்னவெனில் விடுதலை 3 படத்தையும் சேர்த்தே வெற்றிமாறன் இயக்கி வருகிறார் என்பது தான். இதையெல்லாம் கேக்குறப்போ அலை எப்போ ஓயறது தலை எப்போ முழுகுறது என்ற பழமொழி தான் ஞாபகத்துக்கு வருது...!

manju
manju  
Related Articles
Next Story
Share it