Viduthalai part2: விடுதலை2 டிரைலரில் விஜயை சீண்டிய வெற்றிமாறன்... இதெல்லாம் நியாயமா கொதிக்கும் ஃபேன்ஸ்...

by Akhilan |   ( Updated:2024-11-27 01:44:43  )
viduthalai part2
X

viduthalai part2

Viduthalai part2: வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை2 படத்தின் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது. இதில் விஜயின் தவெகவை சீண்டும் வசனங்களும் இடம்பெற்று இருப்பதாக ரசிகர்கள் கடுப்பில் இருக்கின்றனர்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடித்து வெளியான திரைப்படம் விடுதலை. இப்படத்தில் விஜய் சேதுபதி, சேத்தன், கௌதம் மேனன், பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கின்றனர். படம் வெளியாகி சூப்பர்ஹிட் வெற்றியை பெற்றது.

இதையும் படிங்க: எலான் மஸ்க் என் கணக்கை முடக்கினால் அதுவே என் முதல் வெற்றி… SK. அப்படி என்ன சொல்லிட்டாரு?

இதை தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. முதல் பாகத்தினை போல இல்லாமல் இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி மற்றும் மஞ்சு வாரியர் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கி பல மாதங்களாக நடந்தது.

கிளைமேக்ஸ் காட்சி மட்டுமே இருப்பதாக ஜனவரியில் வெற்றிமாறன் கூற அதன் ஷூட்டிங்கும் சேர்த்து சில நாட்கள் முன்னர் தான் முடிந்தது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இளையராஜாவின் இசையில் பார்க்கவே பிரமிக்க வைத்துள்ளது.

மகாராஜாவுக்கு பின்னர் அனுராக் கஷ்யப் மற்றும் விஜய் சேதுபதி கூட்டணி வேறு எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. ஒரு படத்தின் பாசிட்டிவ்வை விட நெகட்டிவ் தான் அதிக ரீச்சை கொடுக்கும் என நினைத்தார்களோ என்னவோ? டிரெய்லரில் விஜயை வம்புக்கு இழுத்துள்ளனர்.

இதையும் படிங்க: விடுதலை 2 விழாவில் மேடையிலேயே கோபப்பட்ட வெற்றிமாறன்!. இப்படி டென்ஷன் பண்ணிட்டீங்களே!..

விடுதலை இரண்டாம் பாகம் டிசம்பர் 20ந் தேதியில் இருந்து ரிலீஸாக இருக்கிறது. முதல் பாகத்தின் வரவேற்பை பெறுமா இல்லையா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும்.

Next Story