Connect with us

Cinema News

வெற்றிமாறனின் விடுதலை தியேட்டரில் வராதா.?! அப்போ இதுக்குதான் படம் எடுக்கிறீங்களா.?!

பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, விசாரணை, அசுரன் என தரமான கதையம்சம் கொண்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கி தமிழ் சினிமாவை தலைநிமிர செய்தவர் இயக்குனர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் அடுத்து எந்த பெரிய ஹீரோ நடிப்பார் என்கிற எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாய் எழுந்து நிற்க,

அடுத்ததாக சூரியை நாயகனாக வைத்து, புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். விடுதலை எனும் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இதையும் படியுங்களேன் –ராமராஜனை ஃபாலோ செய்யும் விஜய் சேதுபதி.! கிழே விழுந்தும் மனுஷன் திருந்தலையே.!

இந்த படம் சிறிய படம் என ஆரம்பிக்கப்பட்டு, தற்போது இதன் அளவு பெரியதாகி கொண்டே செல்கிறது. இப்படம் எப்போது நிறைவடையும் என படக்குழுவினருக்காவது தெரியுமா தெரியாதா என தெரியவில்லை.

இந்த படத்தின் அடுத்தகட்ட ஷூட்டிங் மார்ச் இறுதியில் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. ஆனால், படம் முதலில் தியேட்டரில் ரிலீஸ் ஆகாதம். முதலில் படத்தை சர்வதேச படவிழாக்கத்தில் திரையிட்டு பின்னர் தான் தியேட்டரில் களமிறக்குவார்களாம். எப்படியும் இன்னும் 1 வருடம் ஆகிவிடும் போல விடுதலை , தியேட்டரில் விடுதலை ஆக்குவதற்கு .

google news
Continue Reading

More in Cinema News

To Top