அந்த பார்வையிலயே விழுந்துட்டோம்!...கொள்ளை அழகில் தடம் பட நடிகை...
களறி, பசங்க 2, தடம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவர் நடிகை வித்யா பிரதீப். சினிமாவில் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் சீரியலில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் நடித்த நாயகி சீரியல் இல்லத்தரசிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் ஒரு மருத்துவரும் கூட. கண் மருத்துவம் தொடர்பாக ஆராய்ச்சி செய்து செய்து அதில் முனைவர் பட்டத்தைப் பெற்றுள்ளார்.
அதோடு, சென்னையில் உள்ள பிரபல கண் மருத்துவமனையில் பணியாற்றியும் வருகிறார். நடிப்பு , மருத்துவம் என இரு துறைகளிலும் ஆர்வமாக இருப்பதாகவும் இரண்டிலுமே கவனம் செலுத்தப் போவதாகவும் கூறியவர்.
அவ்வப்போது, அழகான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வாய்ப்பு தேடி வருகிறார்.
இந்நிலையில், காது, கழுத்து, நெற்றி என அழகான நகைகளை அணிந்து செம க்யூட்டாக போஸ் கொடுத்து அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.