கல்யாணம் ஆகி ஒரு மாசம் கூட ஆகல அதுக்குள்ள விவாகரத்து குறித்து பேசிய நடிகை!

by பிரஜன் |
Vidyullekha Raman
X

Vidyullekha Raman

தமிழ், தெலுங்கு சினிமாவில் பல திரைப்படங்களில் காமெடி வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை வித்யுலேகா ராமன். பிரபல சீரியல் நடிகரான மோகன் ராமனின் மகளான இவர் இயக்குனர் செல்வராகவனின் மச்சினிச்சியும் ஆவார். 2012 ஆம் ஆண்டில் கௌதம் மேனன் இத்தலத்தில் வெளியான நீ தானே என் பொன்வசந்தம் படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தொடர்ந்து தீயா வேலை செய்யனும் குமாரு, அஜித்தின் வீரம் உள்ளிட்ட படங்களில் காமெடி நாயகியாக நடித்தார். இவர் அண்மையில் சஞ்சய் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். திருமணமாகி ஒரு மாதம் கூட முடியாத நிலையில் விவாகரத்து குறித்து பேசியுள்ளார்.

Vidyullekha Raman

Vidyullekha Raman

அதாவது வித்யுலேகா ராமன் ஹனிமூனில் பிகினி உடையணிந்து தண்ணீரில் மிதந்துகொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட நெட்டிசன்ஸ் சிலர் உங்களுக்கு எப்போது விவாகரத்து என கேட்டு நக்கலடித்தனர். அதற்கு பதில் அளித்த அவர், கவர்ச்சி ஆடைகளை அணிந்தால் விவாகரத்து என்றால் நன்றாக உடையணியும் பெண்கள் எல்லோரின் வாழ்க்கையும் சிறப்பா இருக்கிறதா? என நச் கேள்வி கேட்டு பதில் அளித்துள்ளார்.

Next Story