அந்த நடிகை பண்ண காரியம்.. இன்னும் அந்த அவமானத்தில் இருந்து மீளாத விக்னேஷ்

vignesh
Vignesh: இன்று விஜய் அஜித்துக்கு இணையான ஒரு இடத்தில் இருக்கக்கூடியவர் நடிகர் விக்னேஷ். 90களில் ஒரு இளம் நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நடித்து மக்கள் மனதை வென்றவர் விக்னேஷ். ஆனால் சூழ்நிலை இவரை ஒரு கட்டத்திற்கு மேலாக இவரை தக்க வைத்துக் கொள்ளவில்லை. சரியான கதை கத்தை தேர்ந்தெடுத்து நல்ல இயக்குனர்களுடன் பணிபுரிந்து ஒரு வேளை இவர் அடுத்த அடுத்த படங்களில் நடித்திருந்தால் இன்று டாப் நடிகர்களில் ஒருவராக மாறியிருப்பார்.
விக்னேஷ் என்று சொன்னாலே அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது ஆத்தங்கர மரமே என்ற பாடல் தான். அந்த ஒரு பாடல் ஒட்டுமொத்த இளம் நங்கைகளை இவர் பக்கம் திரும்ப வைத்தது. இப்போது சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார் விக்னேஷ். படங்களில் இவரை பார்க்க முடியவில்லை. இந்த நிலையில் ஒரு நடிகை பண்ண காரியத்தால் தனக்கு ஏற்பட்ட அவமானம் பற்றி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் விக்னேஷ் .
பிரசாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் வண்ண வண்ண பூக்கள் .பாலு மகேந்திரா இயக்கத்தில் அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. முதலில் அந்தப் படத்தில் நடித்திருந்தது விக்னேஷ் தானாம். விக்னேஷ் மற்றும் பிரசாந்த் ஆகிய இருவரும் டபுள் ஹீரோவாக நடிக்க வேண்டிய திரைப்படம் தான் வண்ண வண்ண பூக்கள். அதில் முதல் ஹீரோ விக்னேஷ் .இரண்டாவது ஹீரோ பிரசாந்த் .அப்போது நடிகை அர்ச்சனா திடீரென சில பரிசு பொருள்கள் கடிதங்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு பாலு மகேந்திராவை பார்க்க படபிடிப்பிற்கு வந்தாராம் .

அப்போது விக்னேஷ் அங்கு நடித்துக் கொண்டிருந்தாராம். வந்ததும் பாலு மகேந்திராவிடம் தான் கொண்டு வந்த பொருட்களை எல்லாம் கொடுத்துவிட்டு இந்த படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள். குட் பாய் பாலு என்று சொல்லிவிட்டு சென்றாராம் அர்ச்சனா. இவரின் இந்த செயல் பாலு மகேந்திராவுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உடனே பாலு மகேந்திரா அச்சு என்னாச்சு என்று கேட்டுக் கொண்டபடியே பின் தொடர்ந்தாராம்.
அதன் பிறகு அர்ச்சனா அவருக்கு சொந்தக்கார பையன் ஒருவனை இந்த படத்தில் போட வேண்டும் என்று கூறியிருக்கிறார். அப்போது பாலுமகேந்திரா இல்லை விக்னேஷ் இந்த படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என கூறினாராம். ஆனால் அர்ச்சனா அதைக் கேட்கவே இல்லையாம். அந்த பையனை நடிக்க வைக்க மிகவும் அடம் பிடித்திருக்கிறார். அந்த நேரத்தில் அர்ச்சனா பாலு மகேந்திராவின் நட்பு மிக நெருக்கமானதாம்.
அதனால் வேறு வழியில்லாமல் விக்னேஷை தூக்கி விட்டு அர்ச்சனா சொன்ன அந்த பையனை இந்த படத்தில் போட்டாராம் பாலு மகேந்திரா. இதைப் பற்றி விக்னேஷ் அந்த பேட்டியில் கூறும் பொழுது அர்ச்சனா பண்ண அந்த ஒரு காரியம் அதிலிருந்து நான் இன்னும் மீள முடியவில்லை. அந்த ஒரு அவமானம் என்னை இன்னும் பாடாய்ப் படுத்துகிறது என்று கூறினார் விக்னேஷ்.